மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 19 ஆம் நாளுக்கான [04 ஆகஸ்ட் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 09.15 - 10.15 மணி வரை
மாலை: 04.45 – 05.45 மணி வரை
நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணி உயர்வு சாதகமாகும். நண்பர்களின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தும். இசை சார்ந்த துறையில் ஆதாயம் ஏற்படும். மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
மனதில் புதுவிதமான சிந்தனை தோன்றும். வர்த்தகம் சார்ந்த விஷயங்களுக்கு ஆலோசனை கிடைக்கும். கல்வி பணியில் ஆதாயம் உண்டாகும். புது பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணியில் அனுபவம் கிடைக்கும். உற்சாகத்துடன் இன்றைய நாள் இருக்கும். உத்தியோகம் செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தாமதமான சுப காரியங்கள் கைகூடி வரும். உறவினர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசு பணி அலைச்சல்களுடன் நடைபெறும். கோபத்தை கட்டுப்படுத்துவது நிம்மதியான சூழலை ஏற்படுத்தும்.
பயணம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகப் பணியில் வேலை சுமை அதிகமாகும். வியாபாரம் மந்தமாக இருக்கும். கடன் விஷயத்தில் நிதானம் வேண்டும். பிடித்தவர்களிடத்தில் அனுசரித்து செல்வதால் பிரச்சனையை தவிர்க்கலாம்.
எதிர்பாலின மக்களால் ஆதாயம் ஏற்படும். மனதை உறுதிய கவலைகள் குறையும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். தடையான காரியத்தை செய்து முடிப்பீர்கள். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் - மனைவி இடையே கருது வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
எதிர்பாராத வரவுகள் வருவதால் லாபம் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தை உற்சாகத்துடன் மேற்கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அனுபவத்தை கொடுக்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும்.
சக ஊழியர்களிடம் கவனத்துடன் நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த விஷ்யங்களில் பொறுமையுடன் செயல்படவும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடி வரும். மற்றவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
மனை வியாபாரம் சுமுகமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைகளாக இருந்த பணிகள் நிறைவுக்கு வரும். கடன் உதவிகள் சாதகமாகும். உடல் பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்திற்காக முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
புது முயற்சிகளில் இருக்கும் நுட்பமான விஷயத்தை அறிந்து கொள்வீர்கள். நினைத்த செயலாக செய்து காண்பிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் நிறைவேறும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும்.
தொழிலில் சிறப்பான திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி வெளிப்படையாக பேசி சமரசமாவார்கள். தனம் சார்ந்த நெருக்கடி குறையும். பொன், பொருள் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
இளைய உடன் பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளால் லாபம் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் வந்து போகும். பழைய நினைவுகளால் குழப்பம் ஏற்படும். மனதில் புது சிந்தனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தற்பெருமையை தவிர்ப்பது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. மனதில் தெளிவு பிறக்கும். விலகிச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…