Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023

Nandhinipriya Ganeshan Updated:
கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாளுக்கான [16 ஜூலை 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். தொட்டது துலங்கும் நாள். நீண்ட நாளாக ஆசைப்பட்ட ஒரு விஷயத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வரவு செலவு இரண்டும் இருக்கும், சாதுர்யமாக செயல்பட்டு சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு உண்டு.  சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு நல்லது நடக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. சுகவீனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழில் சற்று மந்தமாக காணப்படும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமை எதிர்ப்புகள் குறைந்து மனஅமைதி உண்டாகும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். எந்த காரியத்திலும் பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலைகளை கையாள வேண்டும். குடும்ப வாழ்க்கை சிறப்பு. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணியிடத்தில் சகஊழியர்களால் சிக்கல் ஏற்படும். மேலதிகாரிகளிடம் அனுசரியான பேச்சு அவசியம். பணவரவு சுமாராக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது பிரிவினையை தடுக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் தடைபடும். எனவே, முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இருக்கும். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும். சகோதரனின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தலாம், அனுசரித்து போவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எந்த செயலும் ஒரு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிலர் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். ஆரோக்கியப் பிரச்சனை நீங்கும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

அண்டை வீட்டாரால் வீண் விவாதம் வெடிக்கும். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். பிடித்த பொருள் தொலைந்துப் போகலாம். கடன் பிரச்சனையால் நாள் முழுக்க கவலையாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உங்கள் துணையால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடிக்கும். டென்ஷன் ஆக வேண்டாம். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணியில் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். நடக்கும்போது கவனம் தேவை. வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். பணவரவு சுமாராக தான் இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. வழக்கு சார்ந்த காரியங்கள் சாதகமான பலன்களை தரும். எதிர்பாலினத்தவரால் இன்பச் செய்தி காத்திருக்கிறது. உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்கால எண்ணங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆன்மீக வழிபாடு மனஅமைதியை கொடுக்கும். கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நினைத்த காரியம் நிறைவேற தடை ஏற்படும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. பணியிடத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட தவறால் மேலதிகாரியின் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அதிர்ஷ்டமான நாள். வெறுத்து ஒதுக்கிய நபர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். பணியிடச்சூழல் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். வராத கடன்கள் உங்களை வந்தடையும். உங்களுக்கு புது நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் நாளாக இருக்கும். நல்ல காரியங்களுக்கு சென்று வருவீர்கள். கூர்மையான ஆயுதங்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். துணையின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் திறமை பாராட்டப்படும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். தாய்வழி உறவினர்களால் நல்ல செய்து வந்து சேரும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்ல வாய்ப்பு அமையும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கூட்டு தொழில் செய்வோர் பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 16.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். கடனாக கொடுத்த படம் கைக்கு வரும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் லாபகரமான நாள். பொன், பொருள் வாங்கும் யோகம் இருக்கு. எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். எதிர்பாராமல் செய்த உதவியால் சமுதாயத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்