Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan in Tamil: இன்னைக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர்.. ஜூலை 07, 2022 ராசிபலன்..!

Nandhinipriya Ganeshan July 06, 2022 & 17:00 [IST]
Tomorrow Rasi Palan in Tamil: இன்னைக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர்.. ஜூலை 07, 2022 ராசிபலன்..!Representative Image.

Tomorrow Rasi Palan in Tamil | Nalaya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Tomorrow Horoscope in Tamil | Inraiya Rasi Palan | Rasi Palan Today Tamil

நல்ல நேரம்:

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: இல்லை

Tomorrow Rasi Palan in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

துலாம்

எதிர்பாராத நன்மை நடக்க வாய்ப்புண்டு. வேலை செய்யும் இடத்தில் பணிசுமை காணப்படும், கடுப்பாகாமல் பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியம். புதிய உறவு தேடி வரும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். உங்கள் குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் துணையுடன் சில பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகள் உங்க பாக்கெட்டை காலி செய்யலாம். தலைவலி வர வாய்ப்புள்ளதால் அமைதியாக இருப்பது நன்று. பணிசுமை!

விருச்சிகம்

உங்களுடைய முயற்சியால் வெற்றி காண்பீர்கள். அதிகம் நன்மை நடக்கும் நாள். பணியிடத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் முடித்து, உங்க பாஸின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. தனலட்சுமி உங்க வீடு தருவாள். பாத்து பக்குவமாக செலவு செய்யுங்க. இன்று உங்கள் நகரகூடிய சொத்து திருடு போக கூடும். எனவே பாத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்மை!

தனுசு

இன்று லட்சியங்கள் நிறைவேறும் நாள். எல்லாரும் வியந்து பாராட்டுவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். இதனால் சக பணியாளர்கள் பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் தாறுமாறாக இருக்கும். கணவன்-மனைவி இடையே தகராறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். லாபம்!

மகரம்

உங்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் பல நன்மைகளை பெற முடியும். தேவையற்ற மனக்குழப்பம் காரணமாக அற்ப விஷயங்களில் உங்கள் துணையிடம் குற்றம் கண்டுபிடிப்பிங்க. உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க முடியாமல் போகலாம். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் இன்று உங்க முகத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். ஆக மொத்தம் திருப்திகரமான நாள். நிதானம்!

கும்பம்

இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஒருவேலை ரொம்ப அவசியம் என்றால், கடன் வாங்குபவரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொள்ளுங்கள். இண்டர்வியூ செல்ல நல்ல நாள். என்னைக்கும் இல்லாமல் உங்க துணை உங்களின் மீது பாசத்தை அள்ளி கொட்டுவார். இன்று உற்சாகத்துடன் இருப்பீர்கள். பயணத்தின் போது பணம் திருடு போக வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். தோல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜாக்கிரதை!

மீனம்

அனைவரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். இன்னைக்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமல்லாமல், அதிர்ஷ்டகரமான நாளும் கூட. இன்று ஏதாவது முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் தாராளமாக எடுக்கலாம். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை வரலாம். பொறுமை காப்பது நல்லது. பங்கு வர்த்தகத்தின் மூலம் நல்ல லாபமும் பண வரவும் காணப்படும். ஆரோக்கியமும் சூப்பர். அதிர்ஷ்டம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்