Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope in Tamil: இந்த ராசிக்காரருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு.. ஆனா ரிஷப ராசிக்கு பேரிழப்பு காத்திருக்கு.. ஜூலை 07, 2022 ராசிபலன்..!

Nandhinipriya Ganeshan July 06, 2022 & 16:45 [IST]
Tomorrow Horoscope in Tamil: இந்த ராசிக்காரருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு.. ஆனா ரிஷப ராசிக்கு பேரிழப்பு காத்திருக்கு.. ஜூலை 07, 2022 ராசிபலன்..!Representative Image.

Tomorrow Rasi Palan in Tamil | Nalaya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Tomorrow Horoscope in Tamil | Inraiya Rasi Palan 

நல்ல நேரம்:

காலை: 10.45 - 11.45 வரை

மாலை: இல்லை

Tomorrow Rasi Palan in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

மேஷம்

உங்களுடைய திறமையை உணரும் நாள். எதையும் பட்டென்று முடிக்க வேண்டும் நினைப்பீர்கள். இலக்கை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பீர்கள். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி விளையாடும். இன்று வேலை செய்யும் இடத்தில் எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். தொழிலும் திருப்திகரமாக இருக்கும். ஆனந்தம்!

ரிஷபம்

தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். தொழில் சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்தின் போது பணத்தின் மீது அதிக கவனம் தேவை. உங்க குழந்தைகள் உங்களுக்கு குஷிப்படுத்தும் விதமாக ஒரு செய்தியை கொண்டுவருவார்கள். வளர்ச்ச்சியில் தடைகள் காணப்படும். பணிச்சுமை போட்டு பெண்டெடுக்கும். எதிர்பாராத செலவுகள் வரும். நிதிநிலைமையும் திருப்திகரமாக இருக்காது. தடை!

மிதுனம்

மன குழப்பத்தால் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உங்களுக்கு நெருக்கமான ஒருவரால் பணஉதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை, நீங்க நினைத்ததை விட நல்லதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். துணையிடம் சின்ன சின்ன வாக்குவாதங்கள் நடைபெறும். வியாபாரம் சற்று மந்தமாக தான் இருக்கும். குழப்பம்!

கடகம்

இன்னைக்கு உங்க வேளையில மும்மரமாக இருப்பீர்கள். உங்க புத்திசாலித்தனத்தின் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் கிடைக்கும். உங்கள் வணிகம் தொடர்பான விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்க துணையுடன் மனம்திறந்து பேசுவீர்கள். புதிய முதலீட்டிற்கான முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். லாபம்!

சிம்மம்

தன்னம்பிக்கை, மன உறுதியுடன் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் தைரியமாக சமாளிக்க வேண்டும். சந்தேக குணத்தை விட்டொலிப்பது நன்மை பயக்கும். உங்க துணையிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதே சமயம் சண்டைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக இருப்பது நல்லது. தைரியம்!

கன்னி

முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தேவையில்லாததிற்கு எல்லாம் டென்ஷன் ஆகாமல் கூலாக இருங்க.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதற்கு வாய்ப்புள்ளது. இன்னைக்கு உங்க துணையுடன் கல்யாணம் ஆனதை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக எண்ணுவீர்கள். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். செலவு!

துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியினர் தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்