Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய வரவால் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்...ஆனா இதுல மட்டும் கவனம் | Vaikasi Matha Rasi Palan 2023 Kanni in Tamil

Priyanka Hochumin Updated:
புதிய வரவால் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்...ஆனா இதுல மட்டும் கவனம் | Vaikasi Matha Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 கன்னி:

பழங்கால சிவபெருமானின் கோவிலுக்கு சென்று வர வாய்ப்புள்ளது. அல்லது பூர்வீக கோவிலுக்கு நீங்கள் தர்மகர்த்தாவாக நியமிக்க படலாம். அல்லது பூர்வீக கோவிலுக்கு வைகாசி மாதம் முழுக்க தான தர்மங்கள் செய்தால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். குழந்தை மூலமாக எண்ணற்ற மகிழ்ச்சி உங்களை வந்து சேரும். அரசாங்கம் சார்ந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

ஆண் குழந்தை உங்களுக்கு பிறந்தால் அவர்கள் ராஜயோகத்துடன் இருப்பார்கள். இந்த மாதத்தில் வீடு, வண்டி போன்ற சொத்துக்களை வாங்கும் அனுகூலம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில நீங்கள் எதிர்பார்த்த பதவி ஏற்றம் ஏற்படும். மனை விற்பதில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் எதிர்பாராத நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். மற்றவர்களிடத்தில் விட்டு கொடுத்து போனால் நல்லது. சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்