Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

செப்டம்பர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 கடகம்:

இந்த செப்டம்பர் மாதம் கடக ராசியினர், புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஏற்ற மாதமாக இருக்காது. சராசரியாக இருக்கும் வாழ்க்கை போல தான் இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பொருளாதாரம் அமையும். நெருக்கமானவர்களை பிரிந்து இருக்கும் சூழல் அமையும். குடும்பத்தில் குழப்பமான நிகழ்வுகள் வந்து நீங்கும். சுப நிகழ்வுகள் சரியான தருணத்தில் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால் ஆரோக்கியத்தில் சீற்றம் உண்டாகும். தேவையில்லாத சிந்தனைகளை யோசிக்காமல் இருப்பது நல்லது. நெருக்கமான உறவில் இருப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 சிம்மம்:

இந்த செப்டம்பர் மாதத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், வேலை மற்றும் முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். கோபமான சூழ்நிலையில் அதனை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது நல்லது. திருமணம் நிகழ்வுகள் ஏற்படும் முன்பு பல குழப்பங்கள் வந்து போகலாம். தம்பதிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்துடன் செயல் படுவார்கள். செலவுகள் சற்று நிறைய இருக்கும். அழுத்தத்தால் உடல் ஆரோக்கியத்தில் சில இன்னல் ஏற்பட்டு நீங்கும்.

கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசியினர்..! | September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 கன்னி:

எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும் மந்தத்தன்மை உணர்வு அதிகரிக்கும். திருமண பொருத்தம் ஏற்படும் மாதமாக இந்த மாதம் கன்னி ராசிக்கு இல்லை. வராத தனவரவு வந்து சேரும். சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். முதலீடு சம்மந்தமான விஷயத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்