Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைகாசியில் மகர ராசியினருக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Magaram in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வைகாசியில் மகர ராசியினருக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. | Vaikasi Matha Rasi Palan 2023 Magaram in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் மகர ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 மகரம்:

உங்க ராசிக்கு 5ம் இடத்தில் அமர்ந்திருக்கும் சூரியனால், இந்த மாதத்தில் மகர ராசியினருடைய ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். அரசியல்வாதியாக இருப்பவர்கள் பதவி உயர்வு வரும். தந்தையிடம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடந்து முடியும். மாமனார்வழியில் ஆதாயம் உண்டு. ஒரு சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொடுக்கும். இருபாலினத்தவருக்கும் மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக வர வாய்ப்புண்டு. 

தோழி/தோழனாக இருப்பவர்கள் காதலி/காதலானாக மாறக்கூடிய மாதம். நீண்ட நாட்களாக தடைப்பட்ட அல்லது தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் திடீரென்று நடந்து முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. புதிய தொழில் நல்ல மாதம். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் விலகி, நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும், நற்பலன்களை பெற நாமக்கல் ஆஞ்சநேரியரை வழிபாடு செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்