Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதுல மட்டும் கவனமா இருக்கனும் மத்த படி எல்லாம் நல்லதே நடக்கும் | Vaikasi Matha Rasi Palan 2023 Viruchagam in Tamil

Priyanka Hochumin Updated:
இதுல மட்டும் கவனமா இருக்கனும் மத்த படி எல்லாம் நல்லதே நடக்கும் | Vaikasi Matha Rasi Palan 2023 Viruchagam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், விருச்சகம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் விருச்சக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 விருச்சகம்:

மனைவி மற்றும் அவரின் பெற்றோர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்பு ஏற்படும். மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும். மேலும் அதில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காணும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். உயர் கல்வி நீங்கள் நினைத்த இடத்தில் அமையும்.

பிரபலமானவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும். பயணங்கள் அது தொலை தூர பயணமாக கூட இருக்கலாம், அதனை மேற்கொள்ளும் அமைப்பு உண்டாகும். வீட்டில் இருப்பவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தை பிறகும் வாய்ப்புள்ளது. வண்டி ஓட்டி செல்லும் போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும். முயற்சியில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆஞ்சிநேயர் வழிபாடு உங்களுக்கு நல்ல ஏற்றத்தை கொடுக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்