Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vaikasi Matha Rasi Palan in tamil: வைகாசி மாதத்தில் உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா! PART 2

Manoj Krishnamoorthi May 14, 2022 & 16:10 [IST]
Vaikasi Matha Rasi Palan in tamil: வைகாசி மாதத்தில் உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா! PART 2Representative Image.

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

துலாம்

திறமையால் மட்டுமே வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்ந்து அயராது உழைக்கும் உங்கள் ராசியில் கேது பகவான் இருப்பது இந்த மாத முழுவதும் அரசு சார்ந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியதாகும். அலுவலகத்தில் மேல் அதிகாரியுடன் கருத்து வேறுபாடு உருவாகும். சொந்தபந்தத்திடம் கவனமாக இருக்க வேண்டும், வீண் பேச்சு உறவுமுரிவை உருவாக்கும். உடல்நலக் குறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.  செல்வ நிலை அமோகமாக உள்ளது. குடும்பத்துடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

சித்திரை: பண வரவு

சுவாதி: மன உறுதி

விசாகம்: வாக்குவாதம்

வழிபட வேண்டிய தெய்வம்: சிவ வழிபாடு

விருச்சிகம்

நேர்மையான வாழ்க்கை வாழ்வதால் எந்தவித குறையும் இல்லை என்று கடினமான சூழலிலும் நேர்மை தவறாமல் உழைக்கும் உங்களுக்கு வைகாசி மாதம் வாழ்வில் ஏற்றத்தை அளிக்கும். தொழில் மிகவும் நன்றாக இருக்கும், அலுவலகத்தில்  உங்கள் மீது நம்பிக்கை உருவாகும்.  பண வரவு நன்றாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவை அனைத்தும் தீரும், தந்தை வழியில் நன்மைகள் கிடைக்கும். வீட்டில் இன்பமான நிலை இருக்கும். கல்வி நிலை நன்றாக இருக்கும்.

விசாகம்: ஏற்றம்

அனுஷம்: சுகம்

கேட்டை: நன்மை

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சண மூர்த்தி

தனுசு

அனைவரிடமும் அன்பான குணம் கொண்ட தனுசு ராசிக்காரரே இந்த தொழில் ஸ்தானம் நல்ல வளர்ச்சி கொள்ளும், முக்கியமாக இந்த பேச்சு சார்ந்த தொழில் செய்யும் தனுசு ராசிக்காரருக்கு அமோகமான வளர்ச்சி இருக்கும்.  கூட்டுத் தொழிலில் அமோகமான வளர்ச்சி இருக்கும். செல்வ நிலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.  உறவினர்கள் மூலம் நல்ல விசயங்கள் கிடைக்கும், எதிர்பாராத காரியங்கள் நடக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது.

மூலம்: பொறுமை

பூராடம்: ஏற்றம்

உத்திராடம்: அமைதி

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன் வழிபாடு

மகரம்

கடுமையான உழைப்பாளியான மகர ராசிக்காரரே உங்களுக்கு வைகாசி மாதம் சாதகமாக இருக்கும், அலுவலகத்தில் நட்பு உருவாகும். திருமணமாகாத மகர ராசிக்காரருக்கு திருமணத் தடை நீங்கும். இரத்த சொந்தங்களின் மூலம் லாபம் கிடைக்கும். தொழில் நன்றாக உள்ளது, தன வரவு இருக்கும். வியாபாரம் நன்றாக உள்ளது. பூர்வீக சொத்துகள் கிடைக்கும், தந்தை வழியில் கிடைக்கும் உதவி மிகவும் உதவியாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை ஓரளவு நன்றாக இருக்கும்.  

உத்திராடம்: வரவு

திருவோணம்: நிம்மதி

அவிட்டம்: நன்மை

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன்

கும்பம்

வாழ்வில் நிகழும் துன்பங்கள் யாவும் அனுபவமே என்று யதார்த்தமாக நினைக்கும் கும்ப ராசிக்காரரே உங்கள் ராசி அதிபதி சனி பகவான் மற்றும்  செவ்வாயும் அமர்ந்திருப்பது நிலுவையிலிருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் ஸ்தானம் முன்னேறும்.  திருமணம் கைகூடும். பண வரவு இருக்கும். மன தைரியம் அதிகமாகும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது. 

அவிட்டம்: பண வரவு

சதயம்: உழைப்பு

பூரட்டாதி: தீர்வு

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்

மீனம்

சந்தோஷமான மன நிலை கொண்ட மீன ராசிக்காரரே உங்கள் உடல்நலத்தின் மீது  அதிகமான கவனம் வேண்டும். தொழில் சார்ந்த வளர்ச்சி வழக்கமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை கெடும் வாய்ப்பு உள்ளது, பொறுமையாக இருப்பது நிம்மதியைக் கெடுப்பது. நிலுவையிலிருந்த கடன் வரும், தன லாபம் உயரும்.  வரவில் இருக்கும் செல்வம் சுப செலவில் முடியும். கல்வி நிலை நன்றாக இருக்கும்

பூரட்டாதி: மன உறுதி

உத்திரட்டாதி: சுப செலவு

ரேவதி: நிலுவைத் தொகை வரவு

வழிபட வேண்டிய தெய்வம்: பார்வதி வழிபாடு

 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்