Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Astrology in Tamil: கவனமாக இருக்க வேண்டிய அந்த 3 ராசிகள் இதுவா! இந்த வார ராசிபலன்...!

Manoj Krishnamoorthi May 23, 2022 & 17:15 [IST]
Weekly Astrology in Tamil: கவனமாக இருக்க வேண்டிய அந்த 3 ராசிகள் இதுவா! இந்த வார ராசிபலன்...!Representative Image.

சுபகிருது வைகாசி மாதத்தில் இந்த வாரத்தின் (மே 23 முதல் மே 29 வரை) வார ராசிபலனில் (Weekly  Astrology in Tamil) உங்கள் ராசிக்கு தொழில், ஆரோக்கியம், செல்வ நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பதையும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என்பதையும் காண்போம்.

Also Read Part 1: மேஷம் முதல் கன்னி ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.

துலாம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் எதிர்பார்க்காத மருத்துவ செலவு குடும்பத்தில் உருவாகும், செல்வ நிலை அமோகமாக உள்ளது, திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பேசுவதைக் குறைத்து கொள்ளுங்கள். வாக்குவாதம் உருவாகலாம், குடும்பத்தில் பெரியவரிடம் அமைதி காக்க வேண்டும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பொறுமையாக இருப்பது பொருள் சேதத்தை உருவாக்காது. கவனம்!

சித்திரை: கவனம்

சுவாதி: ஆரோக்கியக் குறை

விசாகம்: திருமணத் தடை   

வழிபட வேண்டிய தெய்வம்: ராகவேந்திரர் 

சந்திராஷ்டமம்: மே  29

விருச்சிகம்

பொது பலன்: உங்கள் ராசியில் இந்த வாரம் நன்மைகள் அதிகமாக நடைபெறும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவி  கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும், புதிய வீடு குடியேறும் வாய்ப்பு உள்ளது. மன நிலை தெளிவாக இருக்கும், திருமண வாழ்க்கை மிகவும் அன்யோன்யமாக இருக்கும். பொருளாதாரம் ஏற்றம் இருக்கும். சொத்துகள் வாங்கும் வாய்ப்பு இருக்கும். திருமண பாக்கியம்  உண்டாகும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. உணவு பழக்கத்தைச் சீர் செய்தால் உடல்நலம் உயரும். கல்வி நிலை நல்ல முன்னேற்றம் அடையும், பாராட்டப்படுவீர்கள். மதிப்பு!

விசாகம்: நற்செயல்!

கேட்டை: அன்பு

அனுஷம்: தொழில் வளர்ச்சி

வழிபட வேண்டிய தெய்வம்: திருமால் வழிபாடு

தனுசு

பொது பலன்:   உங்கள் உறுதியான குணத்துக்கு தேவையான வெற்றியை இந்த வாரம் பெறுவீர்கள். வாரத்தின் முற்பாதியில் மனதில்  சில குழப்பங்கள் இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளரின் உதவி மிகப்பெரிய சகாயமாக இருக்கும், நட்பு கிடைக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும். வெளியூரில் வேலை மாற்ற நினைக்கும் தனுசு ராசிக்காரருக்கு இந்த வாரம் பணி மாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவி இந்த வாரம் அதிகமாகத்  தேவைப்படும். உறவினர் மூலம் சுப நிகழ்ச்சி நடக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும். நலம்!   

மூல நட்சத்திரம்: பண வரவு

பூராடம்: சுகம்

உத்திராடம்: சுப செலவு

வழிபட வேண்டிய தெய்வம்:  ஆஞ்சநேயர்

மகரம்

பொது பலன்:  உங்கள்  கலகலப்பான சுபாவத்தால்  மற்றவர்களை ஈர்க்கும் உங்களுக்கு இந்த வாரம் பயணம் செய்வதால் உடல் சோர்வாக இருக்கும். இரத்த உறவின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.  பண வரவு இருக்கும். நற்பெயர் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும், வேலை தேடும் மகர ராசிக்காரருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். கல்வியில் ஆர்வம் குறையும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். வளர்ச்சி!

உத்திராடம்: அலைச்சல்

திருவோணம்: உயர்வு

அவிட்டம்: இன்பம் 

வழிபட வேண்டிய தெய்வம்: துர்கை அம்மன்

கும்பம்

பொது பலன்: உங்கள் சாதுரியமான மனநிலை இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல லாபமளிக்கும், மனம் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உங்கள் செல்வ நிலையை உயர்த்தும். இந்த வாரம் புதிய நபர்கள் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் நல்ல இயல்பு இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். தனுசு ராசி பெண்களுக்கு பெற்றோரின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். மாணவர்களின்  கல்வி செல்வம் சிறப்பாக உள்ளது. ஏற்றம்!

சதயம்: அறிமுகம்

அவிட்டம்: உயர்வு

பூரட்டாதி: நன்மை

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

மீனம்

பொது பலன்: ஆசைப்படும் விசயங்கள் கிடைக்கும் வரை போராடலாம் என்ற உறுதியான குணத்தைக் கொண்ட மீன ராசிக்காரரே இந்த வாரம் பண வரவு இருந்தாலும் மனம் குழப்பமாக இருக்கும்.தொழிலில் உங்கள் முக்கியத்துவம் ஓங்கி இருக்கும். உங்கள் பேச்சால் சில பிரச்சனைகள் உருவாகும் அதனால்  பொறுமையாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்துகள் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும், ஆன்மீக தலத்துக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாகும். திருமண வாழ்வில் மனக் கசப்புகள் இருக்கும். மாணவர்களின் கல்வி ஓரளவு நன்றாக இருக்கும்.

பூரட்டாதி: ஆர்வம்

உத்திரட்டாதி: மாற்றம்

ரேவதி: ஆசை

வழிபட வேண்டிய தெய்வம்: பார்வதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்