Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Intha Vaara Rasi Palan in Tamil: வேலையில் அதிக கவனம் தேவையுடைய ராசிக்காரர்கள் நீங்களா…! கவனமா இல்லனா இதெல்லாம் நடக்குமா..?

Gowthami Subramani May 23, 2022 & 16:15 [IST]
Intha Vaara Rasi Palan in Tamil: வேலையில் அதிக கவனம் தேவையுடைய ராசிக்காரர்கள் நீங்களா…! கவனமா இல்லனா இதெல்லாம் நடக்குமா..?Representative Image.

வைகாசி மாதம் இரண்டாவது வாரத்தில், மேஷ ராசி முதல் கன்னி ராசி வரையிலான நபர்களின் தொழில், வாழ்க்கை நலன், ஆரோக்கிய நலன், பணி நலன் போன்றவற்றில் எவ்வாறு இருக்கப் போகின்றனர் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

பொது பலன்: பொதுவாக, வேகமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்களே நீங்கள் தான். இந்த வாரத்தில் உங்களுக்கு, சுப விரயங்கள் அதிகமாக இருக்கக் கூடிய ஒரு வாரமாக இருக்கும். தொழிலில், நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்த தொகையை எடுப்பீர்கள். கனமான பண வரவு கிடைக்கும். ஆடம்பரமான விஷயத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சற்று குறைவாக உள்ளது. சிறிது கவனமாக இருக்க வேண்டிய வாரமாக அமைகிறது. இந்த வாரம் பொருளாதாரம் சார்ந்த யோசனைகளாக இருக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

அஸ்வினி: சுப விரயம்

பரணி: பண வரவு

கிருத்திகை: ஆரோக்கியத்தில் கவனம் தேவை

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: முருகப் பெருமான் வழிபாடு மிகச் சிறந்த பலன்களைத் தரும் (Weekly Rasipalan).

ரிஷபம்

பொது பலன்: ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்படக் கூடிய வாரமாக அமைகிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சற்று குறைவாக உள்ளது. இதனால், செலவு சற்று அதிகமாகக் காணப்படும். பணப் பொருளாதாரம் ஏற்றமாக இருப்பதுடன் பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் நடக்கும். கல்வி, வேலை போன்றவற்றில் சிறந்த பலன்கள் கிடைக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. உறவினர்கள், பெரியவர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து உதவி கிடைக்கும். இந்த வாரத்தில் இறுதியில் நீண்ட நேர பயணம் உண்டாகும். இதனால், உடல் சோர்வு உண்டாவதற்கான வாய்ப்பாக அமையும். தேவையில்லாத செலவுகள், சுபகாரியச் செலவுகள், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் அவர்களது எதிர்காலத்திற்காக அதிக நேரம் பணியில் ஈடுபடுவீர்கள்.

கிருத்திகை:  சுப விரயங்கள்

மிருக ஸீரிஷம்: பண வரவு

ரோகிணி: செலவு

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: லட்சுமி வெங்கடேஷ்வர பெருமானின் வழிபாடு நன்மையை உண்டாக்கும்.

மிதுனம்

பொது பலன்: இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் எழும். மனக் குழப்பம் சற்று அதிகமாக இருக்கும். வீட்டில் சுபச்செலவுகள் உண்டாகும். திருமண பந்தங்களுக்கிடையே சிறிது பிரச்சனைகள் தோன்றும். மனக்கவலைகள் மற்றும் குழப்பங்கள் அதிகரிக்கும். இதனால், வீட்டில் பிரச்சனைகள் தோன்றுவதற்கான வாய்ப்பும் உருவாகும் (Intha Vaara Rasipalan in Tamil). எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டோமோ என்ற குழப்பம் உண்டாகும். ஆனால், வாரத்தின் இறுதியில் தொழில், வேலை சார்ந்ததில் சிறப்பானவை நடக்கும். புதிய வேலை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மாணவ, மாணவிகளுக்கு ஒரு யோகமான வாரமாகும். பெண்களுக்குச் சந்தோஷங்கள் கிட்டும்.

மிருக ஸ்ரிஷம்: சிந்தனை

திருவாதிரை: சுபச்செலவுகள்

புனர் பூசம்:  மனக் குழப்பம் மற்றும் மனக் கவலைகள்

வழிபட வேண்டிய தெய்வம்: உடுப்பி ஸ்ரீ சிவன் வழிபாடு சிறப்பைத் தரும். ருத்ர ஜவம் செய்வதோ அல்லது ருத்ர ஜவத்தைக் கேட்பதன் மூலமாகவோ, நன்மை உண்டாகும்.

கடகம்

பொது பலன்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக உள்ளது. ஏராளமான நன்மைகள் உண்டாகும். புதிய மனிதர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது நடக்கும். பெரிய மனிதர்களின் அனுக்ரகம், உதவி, சலுகை போன்றவை கிடைக்கும். ஏதாவதொரு விதத்தில் புதிய கடன்களை வாங்க வைக்கும். தொழிலில் மிகச் சிறப்பன பலனை எதிர்பார்ப்பீர்கள். ஸ்மார்ட் வொர்க் செய்து அசத்தும் வாரமாக இந்த வாரம் அமையும். பணப் பிரச்சனைகள் இருக்காது. வீட்டில் பணப்புழக்கம் உண்டாகும். இரண்டு நாள்கள் மட்டும் வீட்டில் சிறிது பிரச்சனை காணப்படும். அந்த காலகட்டத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் நினைப்பது அப்படியே நடக்கும். தெளிவான சிந்தனைகள் உண்டாகும் (Weekly Astrology in Tamil). கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். திருப்திகரமான வாரமாக இந்த வாரம் அமைகிறது.

புனர் பூசம்: மிகச் சிறப்பு

பூசம்: நினைத்தது நடக்கும்

ஆயில்யம்: உதவி

சந்திராஷ்டமம்: மே 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாள்களில் சந்திராஷ்டமம் உள்ளது.

வழிபட வேண்டிய தெய்வம்: குலதெய்வத்தை வழிபட்டு செய்யும் காரியத்தைத் தொடங்கினால், வெற்றியிலேயே முடியும்.

சிம்மம்

பொது பலன்: வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு நன்றாக உள்ளது. அதிகமான வேலை பளு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பயணத்தில் தடை உண்டாகும். மிகக் கவனம் தேவை. தேவையில்லாத மனக் கவலைகள் உண்டாகும். ஆவணங்களில் மிகக் கவனமாக இருப்பது நல்லது (Weekly Horoscope in Tamil). எதுவாக இருந்தாலும், சமாளிக்க முடியும் என்ற எண்ணம் உங்களை மென்மேலும் திளைக்க வைக்கும். உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். கணவருடைய உடல் நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படும். மிகக் கவனமாக இருக்க வேண்டும். கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.

மகம்: கவனம்

பூரம்: தடை

உத்திரம்: பண வரவு

சந்திராஷ்டமம்: மே 25 மற்றும் மே 26 ஆகிய இரு நாள்களில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்ம வழிபாடு செய்து நீர், மோர், பானகத்தை குழந்தைகளுக்குத் தானமாக வழங்குவது மிகச் சிறப்பு

கன்னி

பொது பலன்: குடும்பத்தில் பண வரவு உண்டாகும். மேலும், இதுவரை இருக்கும் பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த பொருள்களை வாங்குவதற்கான யோகமாக இந்த வாரம் உள்ளது. குடும்பத்தில் மூத்த பெண்களுக்கு இருக்கும் பாதிப்புகள் அனைத்தும் விலகும். வேலையில், மிக அதிக ஆர்வம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் (Vaara Rasi Palan in Tamil). சுப விஷயங்களில் கொஞ்சம் தடங்கல் ஏற்படும். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் தேவை. அதிக வேலைப் பளு இருக்கும். சுபச்செலவுகள் அதிகமாக இருக்கக் கூடிய வாரமாக இருக்கும். மாணவர்களுக்குத் தேர்வில் மிகச் சிறந்த கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம்: பண வரவு

அஸ்தம்: ஒற்றுமை

சித்திரை: புதிய நபர்களின் ஆதரவு

சந்திராஷ்டமம்: கன்னி ராசி நண்பர்களுக்கு, இந்த வாரத்தில் 28 ஆம் தேதி சந்திராஷ்டமம் உள்ளது.

வழிபட வேண்டிய தெய்வம்: திருப்பதி வெங்கடாஜல பெருமானின் வழிபாடு மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.

மேலும் படிக்க: துலாம் முதல் விருச்சிகம் வரை அடுத்த 6 ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்