Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pet Animal For Rasi In Tamil: இந்த ராசிக்காரர் இந்த செல்ல பிராணி வளர்த்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்….!

Manoj Krishnamoorthi August 02, 2022 & 18:30 [IST]
Pet Animal For Rasi In Tamil: இந்த ராசிக்காரர் இந்த செல்ல பிராணி வளர்த்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்….!Representative Image.

மனிதனின் பரிணாம வளர்ச்சி காலத்தின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை அவனுடன் வாழ்ந்து அவனை மகிழ்ச்சியடை செய்து, இன்னும் சொல்ல போனால் அவனுக்காக தன் இன்னுயிரையும் தரும் உன்னதமான உறவு நம்ம இரத்த சொந்தமாக இருந்தால் ஆச்சரியம் இல்லை. அதுவே, மற்ற இனத்தைச் சார்ந்த உயிரினமாக இருக்க வேண்டுமென்றால் அது நிச்சியமாக நாம் வளர்க்கும் செல்ல பிராணியாகத் தான் இருக்கும்.  

நம்முடன் வாழ்ந்து நமக்கு தீமைகளிலிருந்து நம்மை காப்பதும் நம்மை சந்தோஷப்படுத்தும் செல்ல பிராணி என்றால் நம்மில் பல பேருக்கு நாய்கள் அல்லது பூனை பற்றி தான் எண்ணம் வரும். ஆனால் நம்மில் பல பேர் அறியாத பல உயிரினங்கள் செல்ல பிராணியாக வளர்க்கப்படுகிறது. இன்னும் சொல்ல போனால் ஒரு சிலருக்கு தெரியாமலே அவர்களின் செல்ல பிராணி அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளித்தரும்.  இவ்வாறு அதிர்ஷ்டத்தை அளிக்கும் செல்ல பிராணி என்பது எல்லோருக்கும் ஒன்றாக இருக்காது. மனிதனின் பிறப்பின் அடிப்படையில் எப்படி 12 ராசியில் ஒரு ராசி அவனின் ராசியாக அமைந்துள்ளதோ அதுபோல 12 ராசிகளுக்கும் தனித்தனி உயிரினங்கள் செல்ல பிராணியாகும். உங்கள் ராசிக்கான செல்ல பிராணி எது என்று அறிய வேண்டுமா....! எங்கள் பதிவு உங்களுக்கு உதவிக்கரமாக அமையும்.

12 ராசியின் செல்ல பிராணி (12 Rasi Pet Animals In Tamil)

மனு தருமத்தின் ஆதாரமாகக் கருதப்படுவது இந்து சமயமாகும், மனிதனுக்கு இணையாக விலங்குகளும் பறவைகளும் கருதப்படுவதாகும். செல்ல பிராணி எப்படி ஆன்மீக ரீதியாக நமக்கு அரணாக அமைகிறது என்பது குழப்பமா...? நமக்கு வரும் ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி செல்ல பிராணிகளுக்கு உண்டு. கீழ்க்காணும் செல்ல பிராணிகளை வீட்டில் வளர்ப்பதோ அல்லது சிலை வடிவத்தில் இருப்பதோ நமக்கு அதிர்ஷ்டமாகும். 

மேஷம் (Pet Animal For Mesha Rasi In Tamil)

செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த மேஷ ராசிக்காரர் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகும். இயற்கையாகவே விலங்குகளிடம் அன்பாக நடக்கும் குணம் கொண்ட இவர்கள் குதிரை, ஆடு , சேவல் போன்றவை வீட்டில் செல்ல பிராணியாக வளர்ப்பது அதிர்ஷ்டமாகும் .

ரிஷபம் (Pet Animal For Rishaba Rasi)

எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய்வு இல்லை என்னும் பிடிவாத குணம் கொண்ட உங்களின் ராசி அதிபதி சுக்கிர பகவான் ஆவார்.  நிதானமாக இருப்பதால் பொதுவாக எல்லா வளமும் உங்களைச் சாரும். இருப்பினும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகவும் சகல ஐஸ்வரியங்களையும் அடைய பசு, காளை, முயல் வளர்ப்பது சிறப்பாகும்.

மிதுனம் (Pet Animal For Mithuna Rasi In Tamil )

புதனின் ஆதிக்கம் நிறைந்த  நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் தான் மையப்புள்ளியாக அமைவீர்கள், அதாவது அனைவரையும் உங்கள் பக்கம் ஈர்த்துவிடுவீர்கள். இருக்கும் நிலையிலிருந்து முன்னேற்றம் அடைய கிளி, நாட்டுக்கோழி, லவ் பேடுஸ், பூனை  வளர்க்க வேண்டும். இந்த பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பது அதிர்ஷ்டமாகும்.

கடகம் (Pet Animal For Kadaga Rasi In Tamil)

சந்திர பகவனின் ஆதிக்கம் நிறைந்த நீங்கள் பணிவான குணத்தால் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள், நீங்கள் கோழி, வான்கோழி, வாத்து போன்றவை செல்ல பிராணியாக வளர்ப்பது உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை அளிக்கும். உங்கள் ராசிக்கு நாய் செல்ல பிராணியாக இருப்பது சொல்லும்படியான பலன் அளிக்காது.

சிம்மம் (Pet Animal For Simha Rasi In Tamil)

இருக்கும் இடத்தில் முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் உங்களுக்கு சூரிய பகவான் ராசியின் அதிபதி ஆவார். எப்போதும் பிறரின் கவனத்தை ஈர்க்கும் காந்த சக்தி உடைய உங்களுக்கு ஆடு, மாடு, நாய், கோழி  போன்றவை வளர்ப்பது மேலும் அதிர்ஷ்டம் அளிக்கும்.

கன்னி (Pet Animal For Kanni Rasi In Tamil) 

புத்திசாலி  தனமாக வரும் ஆபத்தைக் கடக்கும் திறன் கொண்ட உங்கள் ராசிக்கு புதன் அதிபதி ஆகும்.  பொதுவாக நீங்கள் சாதுரியமாகப் புகழையும் செல்வத்தையும் அடையும் கெட்டிக்காரர்கள் இருப்பினும் உங்களுக்கு நாய்,  கிளி, லவ் பேர்டுஸ் வளர்ப்பது மகிழ்ச்சியான வாழ் அளிக்கும்.

துலாம் (Pet Animal For Thulam Rasi)

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர் ஒழுக்கமானவர்கள் ஆவர். எப்போது நீதி தவறாது வாழும் குணம் கொண்ட இவர்களுக்கு கிளி, புறா, பஞ்சவர்ண கிளி போன்ற பறவைகள்  வளர்ப்பது அதிர்ஷ்டமாகும். முக்கியமாக துலாம் ராசிக்காரர்கள் நாய் வளர்ப்பது நன்மை இல்லை, விலங்குகளைக் காட்டிலும் பறவை வளர்ப்பது துலாம் ராசிக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.

விருச்சிகம் (Pet Animal For Viruchigam Rasi In Tamil)

செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த தலைவன் ஆகும் அம்சம் கொண்டவர்கள், இவர்கள் கோழி, வான்கோழி போன்ற கோழி வகைகள் வளர்ப்பது பெரும் அதிர்ஷ்டம் அளிக்கும்.

தனுசு (Pet Animal For Dhanusu Rasi In Tamil)

கலைகளில் வித்தகராகத் திகழும் தனுசு ராசி குரு பகவானின் ஆசிபெற்ற ராசியாகும், பொறுமையின் சிகரமாக இருக்கும் நீங்கள் அதிர்ஷ்டம் பெற பசு மாடு வளர்க்க வேண்டும். மேலும் உங்கள் ராசிக்கு யானை, மயில் போன்ற உயிரினங்களும் அதிர்ஷ்டமாகும். இவற்றை வளர்க்க முடியாத சூழலில் இவற்றைக் காணும்போது உணவளிக்க வேண்டும்.

மகரம் (Pet Animal For Magaram Rasi In Tamil)

அயராது உழைக்கும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் அதிபதியாக இருப்பதால்  நிதி அடிப்படையில் நடப்பீர். உங்களின் அதிபதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தை சிறப்பாக அமைப்பார், இருப்பினும் கழுதை மற்றும் பன்றியை வளர்ப்பது மிகுந்த செல்வ வளம் அளிக்கும். வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் சிலை வடிவத்தில் அல்லது படமாக வீட்டில் வைப்பதும் நன்மை அளிக்கும். 

கும்பம் (Pet Animal For Kumbha Rasi In Tamil)

சாதுரியமாக காரியத்தை சாதித்து கொள்ளும் உங்களுக்கு சனி பகவான் ராசியின் அதிபதியாகும், எனவே  உங்கள் தொழிலில் நீங்கள் கெட்டிக்காரராக விளங்குவீர்கள். அதிர்ஷ்டமான வாழ்வை பெற பறவைகள் வளர்க்கலாம் ஆனால் நாய் வளர்ப்பது பலன் அளிக்காது. சனி பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக இருப்பதால் காக்கைக்கு உணவளிப்பது நன்மை ஆகும்.

மீனம் (Pet Animal For Meena Rasi In Tamil)

குரு பகவனின் ஆசிபெற்ற நீங்கள் தன பாக்கியம் கொண்டவர்களாவர், மேலும் அதிர்ஷ்டமான வாழ்வை பெற ஆடு, மீன், கோழி போன்றவை வீட்டில் வளர்க்க வேண்டும்.  மேற்கண்டவற்றை நீங்கள் வளர்ப்பதால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.      

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Pet Animal For Rasi In Tamil | 12 Rasi Pet Animals In Tamil | 12 Rasi Sella Pirani | Pet For Your Zodiac Signs In Tamil | Pet Animal For Rasi Natchathiram In Tamil |  12 ராசியின் செல்ல பிராணி |  Pet Animal For Rishaba Rasi | Pet Animal For Mesha Rasi In Tamil | Pet Animal For Thulam Rasi | Pet Animal For Viruchigam Rasi In Tamil | Pet Animal For Dhanusu Rasi In Tamil | Pet Animal For Magaram Rasi In Tamil | Pet Animal For Kumbha Rasi In Tamil | Pet Animal For Meena Rasi In Tamil | Pet Animal For Rishaba Rasi In Tamil | Pet Animal For Mithuna Rasi In Tamil | Pet Animal For Kadaga Rasi In Tamil |Pet Animal For Simha Rasi In Tamil | Pet Animal For Kanni Rasi In Tamil |  Best Pet Animal For 12 Rasi In Tamil | Pet Animal For 12 Rasi In Tamil | Lucky Pet Animal For 12 Rasi In Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்