Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Zodiac Sign Unknown Facts In Tamil: மத்தவங்க சந்தோஷத்தில் ஆனந்தம் காணும் 5 ராசிகள்…! இதுல உங்க ராசி இருக்கா..?

Manoj Krishnamoorthi July 29, 2022 & 17:00 [IST]
Zodiac Sign Unknown Facts In Tamil: மத்தவங்க சந்தோஷத்தில் ஆனந்தம் காணும் 5 ராசிகள்…! இதுல உங்க ராசி இருக்கா..?Representative Image.

“சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர்” என கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் திரைப்படத்தில் வரும் பாடலில் இந்த வரி மனிதனின் தனிச்சிறப்பை பரிசாற்றும். இந்த வரி உணர்த்தும் ஆளமான உண்மை யாதனின் தன் சிரிப்பால் தன்னை மட்டுமில்லாமல் தன் சுற்றத்தாரையும் சிரிக்க வைப்பதாகும். விலங்குகளிடம் இருந்து நாம் மாறுபடக் காரணம் நம் பரிணாம வளர்ச்சியா…..? இல்லை, நம்முடைய நகைச்சுவை உணர்வு தான். 

ஒரு திரைப்படமோ அல்லது ஒரு கதையோ இதுவானாலும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் மாயம் இதுவென்றால் யோசித்தால்…..? ஒரே சூப்பர் ஸ்டார் என்பது போல ஒரே பதில் தான்..”நகைச்சுவை” ஆகும்.  அனைவரையும் ஈர்க்கும் இந்த நகைச்சுவை  ஒரு அரிதான  உணர்வு,  சில மனிதர்களிடம் மட்டுமே இருக்கும். கொஞ்சம் யோசித்து பாருங்க…. வடிவேலு காமெடி பிடிக்காதவர்கள் இருக்கிறோமா..! அப்போ  நகைச்சுவை உணர்வு தான் நம்மை மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களின் மனதையும் எளிதாக்கும். ஆனால் நகைச்சுவை உணர்வு அனைவரிடமும் இருக்காது, அது சிலருக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வரமாக அமைகிறது. இந்த பதிவில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட சில ராசிகள்  பற்றி காண்போம்.      

மேஷம்

பொதுவாக நாம் மேஷ ராசி நெருப்பு ராசி அதாவது  இவங்க தன்னை சுற்றி இருப்பவர்களிடம்  ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் இவர்களுக்கு லேசான நகைச்சுவை உணர்வும் உண்டு. இவர்களின் கேலியான  பேச்சுக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வர். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தன் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே  நகைச்சுவை உணர்வைக் காட்டுவர்.

மிதுனம்

12 ராசியில் நகைச்சுவை உணர்வுக்கு புகழ்  பெற்ற ராசி என்றால் மிதுன ராசி தான், சிறந்த பேச்சற்றாலுக்கு சொந்தக்காரர் ஆன இவர்கள்…. தன் வேடிக்கையான சுபாவத்தால் அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடுவர். தன்னுடைய சமோஜித நகைச்சுவையால் பிறரின் மனதைக் காயப்படுத்தாமல் சந்தோஷப்படுத்துவதில் இவர்கள் கெட்டிக்காரர்கள் ஆவர்.   

சிம்மம்

பிறரின் மனதை அறிந்து நடந்து கொள்வதில் தலை சிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ஆவர், எப்போதும் மற்றவர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டுமென நினைக்கும் இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஒரு யுக்தி ஆகும். தன் மனதை இலகுவாக வைத்து அமைதியாக இருந்தால் நகைச்சுவை குணம் நிறைந்த மாமனிதராகக் காட்சியளிப்பர்.

கன்னி

அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரர் ஆன கன்னி ராசிக்காரர் நகைச்சுவை ஆளுமை கொண்ட ராசிக்காரர், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் பிறரைச் சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள். வார்த்தை ஜாலத்தில் நகைச்சுவை செய்யும் இவர்களை யாரும் எளிதில் மறக்க முடியாது. எப்போது எந்த விஷயம் நகைச்சுவையாக இருக்கும் என்பதை அறியும் வரம் கொண்டவர்கள் ஆவர்.  

தனுசு  

எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும் தன் நகைச்சுவையால் பிறரின் மனதை ஆனந்தமாக்கும் அதிர்ஷ்டக்காரர் தனுசு ராசிக்காரர் தான், புதிய மனிதர்களிடம் கூட தயங்காமல்  உரையாடிக் கலகலப்பாக மாற்றக்கூடிய திறமைசாலிகள் ஆவர். பிறரை சிரிப்பு மழையில் நனையச் செய்யும் இவர்களுக்கு எப்போது தன் வாயை மூட வேண்டும் எனத் தெரியாது. இதனாலே இவர்கள் எப்போதும் வேடிக்கையான மனிதராகக் காட்சியளிக்கின்றனர்.  

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

TAG:  Zodiac Sign Unknown Facts In Tamil | Unknown Zodiac Sign Facts In Tamil | Rasi Unknown Facts In Tamil | Zodiac Sign Facts | Facts About Zodiac Signs | Rasi  Facts In Tamil | Horoscope Special | Special Zodiac Characters | Astrology Facts |  Zodiac Sign Facts Aquarius |  Zodiac Sign Unknown Facts In Tamil | Zodiac Sign Facts Virgo | Zodiac Signs Facts Taurus | Taurus Sign Personality | Zodiac Signs Facts Aries | Zodiac Signs Facts Libra | Strange Facts Zodiac Signs Libra | Zodiac Signs Facts Pisces | Zodiac Signs Sagittarius Facts | Zodiac Signs Capricorn | Rasi Unmaiyaka | Zodiac Has More Humour Sense

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்