Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வம்பி இழுத்து பிரச்சனையில் மாட்டி கொள்ள போகும் ராசிக்காரர்..... ஜூலை 30, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 29, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: வம்பி இழுத்து பிரச்சனையில் மாட்டி கொள்ள போகும் ராசிக்காரர்..... ஜூலை 30, 2022 ராசிபலன்!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் சனிக்கிழமை (30.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (30.07.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய  தினம் உங்களின் சுறுசுறுப்பான சுபாவம் நல்ல முன்னேற்றம் அளிக்கும்,  தொழிலில் குறித்த வேலையைக் குறித்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக மாறும். வியாபாரத்தில் பெரிய லாபம் இருக்காது, செலவைச் சமாளிக்கும் அளவு பணம் கையில் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் இன்பமான தருணங்களை உணர்ச்சிவசப்பட்டுத் தொலைக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதம் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் பொறுமையாக இருந்தால் ஆதாயம் பெற முடியும். உங்களின் உணர்ச்சிவசமாகும் குணம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் குடும்பத்தினரின்  உதவியால் புதிய செயல்கள் செய்வீர்கள், மேலும் தொழில் ஸ்தானத்தில் மிகப்பெரிய பலமாக நம்பிக்கையான மனிதரின் உதவி கிடைக்கும். தெளிவான திட்டத்தை  வகுக்க சில உதவிகள் கிடைக்கும். இன்று லாபம் எதிர்பார்க்க முடியாது. 

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்ளுவீர்கள். திடமான மன நிலை இருக்கும். காதல் உறவு சுமுகமாக செல்லும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை வரும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று உங்கள் சீரான வாழ்க்கை வாழ பல உதவிகள் கிடைக்கும், பல முயற்சி வெற்றி அளிக்கும் செயலாக மாறும் தருணமாக இன்று இருக்கும். முக்கியமான மாற்றம் தொழிலில் ஏற்படும். புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும். கல்வி ஸ்தானம் சுமுகமாக செல்லும், சக மாணவர்களின் உதவி சிறப்பாகும்.

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தேவை, கணவன் மனைவி உறவில் சகிப்பு தன்மை அதிகமாகத் தேவைப்படும். காதல் வாழ்வில் சாதாரண உரையாடல் வாக்குவாதமாக மாறக்கூடும். செல்வ நிலையில் பெரியளவு வளர்ச்சி இருக்காது, வரவும் செலவும் சரியாக அமைந்துவிடும்.  ஆரோக்கியக் குறைகள் சற்று குறையும். ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய  தினம் வெற்றி பெறுவதற்காகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும், வழக்கமான வேலையில் அதீத தவறுகள் ஏற்படும், இலக்கை முடிக்க கஷ்டமாக இருக்கும். அலுவலகப் பணி சலிப்பு அளிக்கும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது, சேமிக்கும் எண்ணம் துளிர்விடும்.

குடும்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டும், வீட்டில் உங்கள் அலட்சிய குணம் பிரச்சனையை உருவாக்கும். காதல் வாழ்வில் மனஸ்தாபம் உருவாகும், வாக்குவாதம் உறவில் விரிசலை உருவாக்கும். பதட்டமான மனநிலை ஆரோக்கியத்தில் சில பிரச்சனை உருவாக்கும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் நடத்தையால் நல்ல மதிப்பு பெறுவீர்கள், குடும்பத்தில் உங்களின் முக்கியத்துவம் அதிகமாகத் தேவைப்படும், சுற்றத்தார் உங்களின் அறிவுரையை ஏற்கும் நிலை உருவாகும். தொழில் ஸ்தானம் இயல்பு நிலையில் உள்ளது. வியாபாரத்தின் மூலம் பண வரவு உண்டு, ஆனால் செலவைக் கட்டுப்படுத்த முடியாது. 

குடும்ப வாழ்க்கை சுமுகமாக நகரும், ஆரோக்கியத்தில் கவம் காட்ட வேண்டும். மாணவர்களின் மனநிலை இன்பமாக இருக்கும், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரிவு! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று தொழில் சார்ந்த எந்தவொரு முக்கிய முடிவுகளும்  ஆலோசனை செய்யாமல் எடுக்க வேண்டாம், குடும்பத்தினரின் வார்த்தையை பின்பற்றுவதால் நல்ல முன்னேற்றம் பெற முடியும், வியாபாரத்தில் குடும்பத்தினரின் உதவியால் லாபம் காண்பீர்கள், ஆனால் செல்வம் வந்த வழி தெரியாமல் செலவாகும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக  இருக்கும். பயணத்தில் அமைதி காண்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அமைதியான மனநிலை இன்று கிடைக்கும், ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்