Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் நாள் செவ்வாய் கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - நிதானம்

ரிஷபம் - பாராட்டு

மிதுனம் - ஏமாற்றம்

கடகம் - பொறுமை

சிம்மம் - முயற்சி 

கன்னி - நலம்

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை 

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

அனுகூலப் பலன்களை அனுபவிக்க எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையில் கவனம் தேவைப்படும் நாள். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். அனாவசிய செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் வழியில் ஆதரவு கிடைக்கும். பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைக்கூடும். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

ஏமாற்றம் மிகுந்த நாள், அதனால் அதிகமாக எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பணிசுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய மனை, வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுடன் சின்ன சலசலப்பு ஏற்படும். வார்த்தையில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவரின் அனுசரித்து நடத்து கொள்ளவும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் அனுபவமிகுந்தவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அனுகூலப் பலன்களை அடைய முடியும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், செலவுகள் அதிகரிக்கும் நாள். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: கன்னி ராசியினருக்கு யோகம் தான்.. ஆனா மிதுன ராசியினருக்கு..? 13.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு, அரவணைப்பும் அதிகரிக்கும் நாள். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [13.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்