Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

1.2 L & 1.5 L டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்த Tata..!

Manoj Krishnamoorthi Updated:
1.2 L & 1.5 L டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்த Tata..!Representative Image.

இந்தியாவில் பிரபலமான Tata நிறுவனம் மோட்டார் உற்பத்தியில் கை வைக்காத முயற்சி இல்லை. இவர்களின் உற்பத்தி இருக்கும் தரம் என்றுமே வாடிக்கையாளர்களை Tata பக்கத்தில் தக்க வைத்தது.  ஜனவரி 13- 18 வரை 2023 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுகிறது. பல முன்னணி கார் உற்பத்தியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பை  காட்சிப்படுத்துகின்றனர். இதில் Tata புதிய வகை இன்ஜின்களை அறிமுகம் செய்துள்ளது. 

1.2 L & 1.5 L டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்த Tata..!Representative Image

2023 ஆட்டோ எக்ஸ்போவில் Tata தங்களின் 1.2 l மற்றும் 1.5 l இன்ஜினை அறிமுகம் செய்தது. 1.2l இன்ஜின் 122 bhp பவரை 225 Nm டார்க்கில் வெளிப்படுத்தும். அதேவேளையில் 1.5 l T-GDI இன்ஜின் 165 bhp @ 280 Nm வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு குறைந்த எரிசக்தி செலவில் நல்ல பவரை வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதை சரி செய்யும் வகையில் டாடா உருவாக்கிய 1.2 l & 1.5 l இன்ஜின் குறைந்த பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தும். BS6 விதிமுறைக்கு உட்பட்ட 1.2 l & 1.5 l இன்ஜின்கள் E20 Fuel ம் செயல்படும் திறன் கொண்டது ஆகும். 

1.2 L & 1.5 L டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்த Tata..!Representative Image

குறுகிய fuel பயன்பாட்டில் அருமையான பவரை வெளிப்படுத்தும் இன்ஜினை அறிமுகம் செய்த Tata நிறுவனம் Curvv SUV காரையும் காட்சிப்படுத்தியது. அதுமட்டுமின்றி Tata Harrier EV, Altron, Avinya, Tiago EV, Safari போன்ற மாடலையும் காட்சிப்படுத்தியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை