Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Auto Expo 2023 பார்வை நேரம் ? டிக்கெட் எவ்வளவு..?

Manoj Krishnamoorthi Updated:
Auto Expo 2023 பார்வை நேரம் ? டிக்கெட் எவ்வளவு..? Representative Image.

ஆட்டோ எக்ஸ்போ புதிய கார்களின் கண்காட்சி அல்ல, இது புதிய டெக்னாலஜியின் ஆரம்பம் என்று கார் பைக் பிரியர்களுக்கு மட்டுமே தான் புரியும். ஆமாம், புதுவிதமான தொழில்நுட்பங்களை  கொண்டு புதிய கார்களை பல முன்னணி நிறுவனங்கள் காட்சிப்படுத்தும்.  இந்த வருடம் ஜனவரி 13- 18 வரை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் 48 மேற்பட்ட புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Auto Expo 2023 பார்வை நேரம் ? டிக்கெட் எவ்வளவு..? Representative Image

Auto Expo 2023

ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும். ஆனால் கோவிட் காரணமாக இந்த தள்ளி வைக்கப்பட்டது. 114 தொழில்துறை பங்குதாரர்கள் கலந்து கொள்ளும் ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 13, 2023யில் தொடங்கியது.  2023 ஆட்டோ எக்ஸ்போ கிரேட்டர் ஷோ நொய்டாவிலும் காம்போனெண்ட் ஷோவை  டெல்லியும் நடைபெறுகிறது.

Auto Expo 2023 பார்வை நேரம் ? டிக்கெட் எவ்வளவு..? Representative Image

Auto Expo 2023 Ticket

6 நாட்கள் நடைபெறும் 2023 ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 13 அன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. பல முன்னணி கார் நிறுவனங்களின் கார்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஜனவரி 11- 12 ஆகிய இரு தினங்களும் ஆட்டோ எக்ஸ்போ இருந்தது, ஆனால் இதில் ஊடகத் துறை மட்டுமே பங்குபெற்றனர். காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ள Auto Expo 2023 ஜனவரி 13  மட்டும் வணிகங்களுக்காக செயல்படும் அதன் பின்னர் ஜனவரி 14- 18 பொதுமக்களின் பார்வைக்கும் ஆகும். 

முதல் நாளான 13 ஜனவரி 2023  அன்று 750 ரூபாய்க்கு விற்பனை ஆகும் டிக்கெட் படியாக ஒவ்வொரு நாளும் குறையும். டிக்கெட் விலையில் மாற்றம் ஏற்படுவது போல காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் எக்ஸ்போ  திறந்திருக்கும் நேரத்திலும் சிறிய மாற்றம் உள்ளது. அது பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

நாள் 

பார்வை நேரம்

டிக்கெட் விலை

ஜனவரி 13

காலை 11 மணி- இரவு 7 மணி வரை 

ரூ. 750/

ஜனவரி 14

காலை 11 மணி- இரவு 8 மணி வரை

ரூ. 475/

ஜனவரி 15

காலை 11 மணி- இரவு 8 மணி வரை

ரூ. 475/

ஜனவரி 16

காலை 11 மணி- இரவு 7 மணி வரை

ரூ. 350/

ஜனவரி 17

காலை 11 மணி- இரவு 7 மணி வரை

ரூ. 350/

ஜனவரி 18

காலை 11 மணி- இரவு 6 மணி வரை

ரூ. 350/


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்