Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ather 450X விலை அதிகமாக இருந்தாலும் இருக்குற வசதிக்கு ஏராளம்..! | Ather 450x price

Manoj Krishnamoorthi Updated:
Ather 450X விலை அதிகமாக இருந்தாலும் இருக்குற வசதிக்கு ஏராளம்..! | Ather 450x price Representative Image.

இன்று அதிகரித்து வரும் பெட்ரோல் விலை நம்மை எலக்ட்ரிக் வாகனத்தை நோக்கி செல்ல வைக்கிறது. இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் அதிகமான வாடிக்கையாளரை கொண்டது Ather நிறுவனம் ஆகும்.  இந்த ஏத்தர் நிறுவனம் உருவாக்கியுள்ள Ather 450X ஸ்கூட்டரின் விலை, செயல்திறன், விற்பனையாகும் தேதி போன்றவற்றை காண்போம். 

Ather 450X விலை அதிகமாக இருந்தாலும் இருக்குற வசதிக்கு ஏராளம்..! | Ather 450x price Representative Image

Ather 450X

ஏத்தர் நிறுவனத்தின் வெளியாக உள்ள எலக்ட்ரிக் மாடல் Ather 450X ஆகும். 5400w PMSM மோட்டார் கொண்ட Ather 450X ஒருமுறை சார்ஜ் செய்தால் 146 km வரை பயணிக்கும் திறன் கொண்டது. லித்தியம் ஐயன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் 40 நிமிடம் தேவைப்படும். இந்த Li- ion பேட்டரி 3.7 kWh திறன் கொண்ட பேட்டரி 3.3 kW பவரை 26 டார்க்கில் வெளிப்படுத்தும். 

3 வருட வாராண்டி கொண்ட Ather 450X பைக்கின் பேட்டரி வாட்டர் ப்ரூஃப் கொண்டது. 0- 40 ஸ்பீடு எடுக்க 3.3 வினாடி மட்டுமே ஆகும். இதன் அதிகபட்சமாக வேகமாக 80 km ஆகும்,  பிரண்டு மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.  304.8 mm பிரண்டு மற்றும் 304.8 mm ரியர் அலாய் டையர் இரண்டுமே டூப்லெஸ் ஆகும். 

இதன் கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். நார்மல் மோடில் 85 km செல்லும் Ather 450X ஸ்கூட்டர் eco mode இல் 105 km, Sports mode இல் 75 km செல்லும்  என 3 mode செல்லும் திறன் கொண்டது.  இதன் Push Button மூலம் தான் வண்டியை start செய்ய முடியும். 

22 l சீட் ஸோட்ரேஜ் கொண்ட Ather 450X 7 இன்ச் TFT டிஸ்பிளே, டிஜிட்டல் டிரிப் மீட்டர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், ரைடிங்க் மோடு போன்ற ஆப்சன்கள் நம்மை வாங்குவதற்கு சரியான சாய்ஸ் என உறுதி செய்கிறது. இதன் android OS, snapdragon 212 processor,  இன்டர்நெட் கனெக்டிவிடி போன்ற ஆப்சன்கள் நமக்கு சுலபமான வசதியாக இருக்கிறது. 1295 mm வீல் பேஸ் (wheel base) கொண்ட Ather 450X விலை 1.36- 1.58 லட்சம் ரூபாய் மதிப்பு ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்