Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Audi e-tron தான் ரொம்ப ஸ்பெஷலான ev கார்.. அப்படியொரு வேகம் செல்லுமாம்...!

Manoj Krishnamoorthi Updated:
Audi e-tron தான் ரொம்ப ஸ்பெஷலான ev கார்.. அப்படியொரு வேகம் செல்லுமாம்...!Representative Image.

Audi தயாரிப்பில் உருவாகியுள்ள எலக்ட்ரிக் கார் Audi e-tron, சொகுசு ரக கார்களின் உற்பத்தியில் மிகவும் பிரபலமான Audi உருவாக்கியுள்ள ev கார் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. இரண்டு வேரியண்டில் விற்பனையாகும் Audi e-tron எலக்ட்ரிக் காரின் விலை, செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், வசதி போன்றவற்றை பார்ப்போம். 

Audi e-tron தான் ரொம்ப ஸ்பெஷலான ev கார்.. அப்படியொரு வேகம் செல்லுமாம்...!Representative Image

Audi e-tron

எலக்ட்ரிக் ரக வாகனங்களில் காஸ்டிலியான Audi e-tron ரூ. 1.01- 1.19 கோடி விற்பனையாகிறது,   Audi e-tron ஒருமுறை சார்ஜ் செய்தால் 264- 379 km வேரியண்ட் ஏற்றபடி செல்லும் திறன் கொண்டது. இதன் 95 kWh பேட்டரி 8.5 மணி நேர பேக் அப் கொண்டது. 

5 சீட் சொகுசு ரக எலக்ட்ரிக் வாகனமாக உருவாகியுள்ள Audi e-tron பாதுகாப்பு தரத்தில் 5 ஸ்டார் கொண்டது.  வழக்கமாக இருப்பதை விட 8 ஏர்பேக் உள்ளது. மேலும் பிரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங்  சென்சார், ரியர் வியூ கேமரா நமக்கு வசதியான ரிரைவிங் அம்சம் அளிக்கிறது.  

71kWh மற்றும் 95 kWh எலக்ட்ரிக் மோட்டாரில் இரண்டு வேரியண்டில் தயாராகி உள்ளது. இதில் 71 kWh வேரியண்ட் 312 PS பவர்/ 540 Nm டார்க் வெளிப்படுத்தும், அதேவேளையில் 95 kWh வேரியண்ட் 360PS பவர்/ 664 Nm டார்க் வெளிப்படுத்தும். 

இதன் தோற்ற அமைப்பு நிச்சயம் BMW iX, Mercedes- Benz EQC, jaguar I-Pace போன்ற முன்னணி கார்களுக்கு போட்டியாக அமையும். உட்புற டிசைனிங் குறிப்பிடும்படி 10.1 இன்ச் டச் ஸ்கீரின் ஆன்ச்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் பிளேவில் செயல்படும் வகையில் அமைத்திருப்பது ஈர்க்கும் அம்சமாகும். 

ஆட்டோமெட்டிக் கியர் டெரன்மிஷன் கொண்ட Audiச் கார் அதிகபட்சம் 190 km/h  செல்லும் திறன் கொண்டது. இந்த  e-tron யின் அடுத்த வெர்ஷனான Q8 e-tron 2023 ஜூன் முதல் இந்தியாவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்