Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

PMV Eas- E  கார்  சின்னதா இருந்தாலும்...  இதுலா எல்லாம் வசதியும் இருக்கு....! 

Manoj Krishnamoorthi Updated:
PMV Eas- E  கார்  சின்னதா இருந்தாலும்...  இதுலா எல்லாம் வசதியும் இருக்கு....! Representative Image.

எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் அதன் லான்ச் தீவரமாக நடைபெறுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் இந்த வரிசையில் வந்தாலும் பல ஸ்டார்டப்களும் அசத்தலான ev வாகன தயாரித்து வருகிறது. மும்பை சேர்ந்த ஸ்டார்ட் அப்  PMV எலக்ட்ரிக் உருவாக்கிய ev கார் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது.  குறைந்த விலையில் கிடைக்கும் ev கார் என்ற பெருமையை கொண்ட PMV Eas- E வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.  விலை குறைவாக கிடைக்கும் PMV Eas- E யின் செயல்திறன், பேட்டரி பேக் அப் போன்றவற்றை பற்றி காண்போம். 

PMV Eas- E  கார்  சின்னதா இருந்தாலும்...  இதுலா எல்லாம் வசதியும் இருக்கு....! Representative Image

PMV Eas- E

சிறிய அளவில் இரண்டு பேர் செல்லக்கூடிய 1 சீட் வண்டியான PMV Eas- ஏ எலக்ட்ரிக் கார் 13 hp பவர் 50 Nm டார்க்  வெளிப்படுத்தும். பெட்ரோல் வெர்ஷன் பைக் அளிக்கும் பவர் இந்த காரில் இருப்பது சாலையில் ரொம்ப மெதுவாக செல்வது போல தோன்ற வைக்காது.  இதன் அதிகபட்ச வேகம் 70 kph, அளவில் சிறிய காராக உருவாக்கி இருந்தாலும் 0- 40 kph செல்ல 5 வினாடி மட்டுமே தான் எடுக்குமாம். 
Hatchback மாடலில் மைக்ரோ காராக தயாரிக்கப்பட்டுள்ள PMV Eas- E கார் பவர் விண்டோ, அலாய் வீல் கொண்டது. 2 பேர் மட்டும் அமரும் வகையில் உருவாகியுள்ள இந்த காரின் சீட் டிரைவர் சீட் பின் 2 வது சீட் வடிவமைத்துள்ளது. இதில் ஏசி, ஹிட்டர், பார்க்கிங் சென்சார் வசதியும் உள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் டெரன்மிஷன் என்பது எளிமையாக ஓட்ட முடியும். 
மேலும் LCD டிஸ்பிளே கிளஸ்டர், டரங் ஸ்பேஸ் போன்றவை இருப்பதால் கார் சிறியதாக இருந்தாலும் உள்ளே அமரும்போது வசதி குறைவு இருப்பதாக தெரியாது. குறைந்த விலையில் கிடைக்கும் கார் என்பதால் அடிப்படை பாதுகாப்பு ஆப்சன் எதிலும் காம்ரமைஸ் ஆகவில்லை.  சீட் பெல்ட், ஹை டென்சில் டூபலர் ஸ்பேஸ், ரியர் கேமரா போன்றவை இந்த  PMV Eas- E காரின் அடிப்படை ஸேஃபிடி புயூசர்கள். ஆனால் இந்த வண்டிக்கு பிரண்டில் டிஸ்க் பிரேக் கொடுத்தாலும் பின்பக்கத்தில் டரம் பிரேக் தான் பொருத்தப்பட்டுள்ளது.

 

PMV Eas- E  கார்  சின்னதா இருந்தாலும்...  இதுலா எல்லாம் வசதியும் இருக்கு....! Representative Image

4.79 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும்  PMV Eas- E காருக்கு ஃபாஸ்ட் இல்லாதது மேற்கோள் காட்ட வேண்டியது.  ஆனால் முழுமையான பேட்டரில் 160 km தூரம் செல்லும் திறன் கொண்டது. இதன் பேட்டரி 48V li-ion-phosphate ஆகும். சாலையில் செல்லும் போது இடையூறு இல்லாமல் இருக்கும் 180 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் எல்லாம் கவனிக்க வேண்டியவை ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்