Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

Kia ev 9 காரின் புக்கிங் எப்போ ஆரம்பிக்கும் தெரியுமா..!

Manoj Krishnamoorthi Updated:
Kia ev 9 காரின் புக்கிங் எப்போ ஆரம்பிக்கும் தெரியுமா..!Representative Image.

Kia நிறுவனம் சொகுசு வாகனம் அல்லாத கேட்டகரியில் முதன்மை படைக்கும் நிறுவனம் ஆகும். இந்த பிராண்ட் மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை Kia காரின் ஒவ்வொரு லான்ச்யையும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. Kia ev9 கார் அப்படி பலரின் எதிர்பார்ப்பை கொண்ட கார் ஆகும். 2024 இல் லான்ச் ஆகுமென எதிர்பார்க்கப்படும் kia ev 9 யின் செயல்திறன், விலை, அதிகபட்ச வேகம், கலர் வேரியண்ட் போன்றவற்றை ஒவ்வொன்றாக காண்போம். 

Kia ev 9 காரின் புக்கிங் எப்போ ஆரம்பிக்கும் தெரியுமா..!Representative Image

Kia ev 9

தென்கொரிய நிறுவனமான Kia காரின் டிசைனிங் அம்சமே இந்த காரின் பிரபலத்திற்கு காரணம். அதுவும் இதன் பீரியம் தரமான இண்டீரியர் நம்மை Kia பிராண்டின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை ஏற்படுத்தும். 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட kia ev 9 கார் 80 லட்சம் முதல் விற்பனை ஆகும்.

தாராளமான வசதிகள் கொண்ட எலக்ட்ரிக் வாகனமாக உருவாகியுள்ள kia ev 9 டூயல் மோட்டார் கொண்டது, இது 515 Nm டார்க்கில் 400 hp வெளிப்படுத்தும். 400 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட Kia ev 9 கார் 0-60 எடுக்க வெறும் 5.2 வினாடியே இந்த காருக்கு போதும். 

SUV டைப் எலக்ட்ரிக் காரான Kia ev 9 கார் 77.4 kWh பேட்டரி பேக் அப் கொண்டது.  ஆட்டோமெட்டிக் டெரன்மிஷன் கொண்ட இந்த கார் 10- 80 % சார்ஜ் ஏற 20 நிமிடம் மட்டுமே தான் தேவைப்படும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 மைல் தூரம் பயணிக்கலாம். 

ஆல்வீல் டிரைவ் காராக உருவாக்கிய Kia ev9 தோற்றமைப்பு 4,929mm  நீளம் 2,055 mm அகலம் கொஞ்சம் Range Rover அளவில் உள்ளது. 5 டிரிம் வேரியண்டில் உருவாகியுள்ள Kia ev 9 காரின் விற்பனை இந்தியாவில் 2024 முதல் வரலாம் என நம்பப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்