Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Audi Q8 e-tron எலக்ட்ரிக் காரில் இருக்கும் வசதியை பார்த்தாலே வாங்க தோன்றும்…! 

Manoj Krishnamoorthi Updated:
Audi Q8 e-tron எலக்ட்ரிக் காரில் இருக்கும் வசதியை பார்த்தாலே வாங்க தோன்றும்…! Representative Image.

வாகனம் பிரியர்கள் அதிகம் தேடும் பிராண்டு Audi ஆகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான Audi நிறுவனம் ஜெர்மன் நாட்டை பூர்வீகமாக கொண்டதாகும். அதிகமாக விற்பனை ஆகும் சொகுசு கார் நிறுவனங்களில் Audi ஒன்றாகும். Audi Q8 தான் Audi நிறுவனம் 2018 இல் உருவாக்கிய முதல் SUV டைப் கார் ஆகும்.

இதன் அடுத்த வெர்ஷனாக Audi Q8 e-tron காரை 2019 இல் அறிமுகம் செய்தது. இதுவே Audi காரின் முதல் எலக்ட்ரிக் புரடக்‌ஷென் கார் ஆகும். இந்த 2023 ஆண்டில் சில அப்டேட் உடன் வெளியாக உள்ள Audi Q8 e-tron காரின் விலை, மைலேஜ், சிறப்பு போன்றவற்றை காண்போம். 

Audi Q8 e-tron எலக்ட்ரிக் காரில் இருக்கும் வசதியை பார்த்தாலே வாங்க தோன்றும்…! Representative Image

Audi Q8 e-tron

எலக்ட்ரிக் வெர்ஷன் காரான Audi Q8 e-tron 5 சீட் SUV டைப் கார் ஆகும். மூன்று வீதமான மோட்டார் ரேஜ்ஜில் 89 kWh டுயல் மோட்டார்,  106 kWh டுயல் மோட்டார், 106 kWh ட்ரிப்பிள் மோட்டார் கொண்ட பேட்டரி 509 km, 600 km, 513 km தூரம் செல்லும் திறன் கொண்டது. இதன் பேட்டரி 10- 80% சார்ஜ் பெற 30 நிமிடம் ஆகும். 

மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கும்  Audi Q8 e-tron பேட்டரி வேரியண்டிற்கு தகுந்தவாறு சில மணி நேரம் வித்தியாசம் கொண்டதாக இருக்கும். இது 408- 503 hp பவரில் 664- 973 Nm டார்க்கை வெளிப்படுத்தும் டிறன் கொண்டது. ஆட்டோமெட்டிக் கியர் டெரன்மிஷன் கொண்ட Audi Q8 e-tron டிசைன் ஈர்க்கும் வண்ணம் உள்ளது. 

இதன் 10.1 இன்ச் டச் ஸ்கீரின்  சிஸ்டம், 12.3 இன்ச்  டிஜிட்டல் டைரவர் டிஸ்பிளே, 4 கிளைமெட் கண்ட்ரோல் , பவர்- அஜ்ஜஸ்ட்மண்ட் சீட் போன்ற ஆப்சன்கள் நமக்கு வசதியான ஆப்சன்கள் இருக்கிறது. Jaguar I Pace, Mercedes Benz EQC, BMW iX இணையான ஆப்சன் கொண்ட Audi Q8 e-tron காரின் விலை 1.10 கோடி முதல் விலை மாறுபடும். இந்த கார்  ஜூன் மாதம் 2023 இல் விற்பனைக்கு வரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்