Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் புக்கிங் துவங்கிய Citroen eC3 கார்...!

Manoj Krishnamoorthi Updated:
இந்தியாவில் புக்கிங் துவங்கிய Citroen eC3 கார்...!Representative Image.

Citroen  நிறுவனத்தின் முதல் ev கார் Citroen eC3, இந்த கார் சந்தையில் அறிமுகமான நிலையில் இன்று முதல் விற்பனை தொடங்க உள்ளது.  எலக்ட்ரிக் வெர்ஷனாக வெளியாகி உள்ள Citroen  கார் பெட்ரோல் வெர்ஷனை போல தோற்றத்தில் அமைந்துள்ளது.  

ஜனவரி 25 2023 முதல் Citroen eC3 காரின் புக்கிங் செயல்படுகிறது, இந்த காரை வாங்க 25,000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும். 5 சீட் எலக்ட்ரிக் காரான இந்த eC3 57 hp பவர் மற்றும் 143 Nm டார்க் கொண்டது. அத்துடன் 0-60 km செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 107 km/h செல்லுமாம். 

இந்தியாவில் புக்கிங் துவங்கிய Citroen eC3 கார்...!Representative Image

குறிப்பாக இதன் 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 10 இன்ச் டச் ஸ்கீரின் போன்ற ஆப்சன்கள் கவனிக்க வேண்டியது. 29.2 kWh பேட்டரி பேக் திறன் கொண்ட eC3 கார் வேகமாக சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BS6 வரையறையில் உருவாகியுள்ள eC3  கார் தரமான பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ளது. 

இதன் பவர் சன்னல் மற்றும் ABS பிரேக் சிஸ்டம் வண்டியின் மீது நல்ல பார்வை வைக்க தூண்டுகிறது. ஆட்டோமெட்டிக் கியர் மற்றும் முழுமையான சார்ஜில் 320 km செல்லும் திறன் போன்ற வசதிகள் வரவேற்கப்படுகிறது. பிப்ரவரி 2023 முதல் சாலையில் இந்த பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்