Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் கொமாக்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Abhinesh A.R Updated:
அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் கொமாக்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!Representative Image.

மின்சார வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் கொமாக்கி ஸ்கூட்டர் நிறுவனம், தங்கள் தயாரிப்புகளின் புதிய பதிப்புகளை வெளியிட தயாராகி உள்ளது. அந்த வகையில், தங்களின் SE ரக ஸ்கூட்டர்களுக்கு புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது.

கொமாக்கி அதன் SE எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அதிக மைலேஜ், மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று மாடல்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவை ஈகோ, ஸ்போர்ட், ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் ஆகிய மூன்று மாடல்களும் அடங்கும்.

இதுகுறித்து பேசிய கோமாகி எலக்ட்ரிக் பிரிவின் இயக்குநர் குஞ்சன் மல்ஹோத்ரா, “SE Eco இன் வேக வரம்பு 55 முதல் 60 கிலோமீட்டராக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் SE ஸ்போர்ட் மற்றும் SE ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் ஸ்கூட்டரின் வேக வரம்புகள் 75 முதல் 80 கிலோமீட்டராக உள்ளன. இவை நெருக்கடியான நகரங்கள், நெடுஞ்சாலைப் பயணம் என அனைத்திற்கும் சிறந்தது,” என்று கூறினார்.

அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் கொமாக்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!Representative Image

கொமாக்கி புதிய வேரியன்ட் ஸ்கூட்டர் விலை

Komaki SE எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்ச் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் LiFePO4 ஸ்மார்ட் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை  செயலி அடிப்படையிலானவை என்று கூறப்பட்டுள்ளது. இது அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. மேலும் தீ-எதிர்ப்புத் திறன் கொண்டவையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் பேட்டரிகளை நான்கு முதல் ஐந்து மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வெர்ஷன் ஸ்கூட்டரின் விலையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் SE Eco ஸ்கூட்டரின் விலை ரூ.96,968 ஆகவும், SE Sport விலை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 938 ரூபாய் ஆகவும், SE ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் ரூ.1,38,427 என்ற எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர்களில் எகோ, ஸ்போர்ட், டர்போ ஆகிய மூன்று திறன் ஆப்ஷன்கள் உள்ளன. வாகன ஓட்டிகள் தேவையான நேரத்தில் இதனை பயன்படுத்தி பயன்பெற முடியும். இந்த ஸ்கூட்டரின் பூட் ஸ்பேஸ் 20 லிட்டர் ஆகும். எனவே, ஷாப்பிங் செல்லும்போது கவலை இல்லாமல் இருக்கலாம்.

அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் கொமாக்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!Representative Image

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்

மேலும், பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. அதில் முக்கியமானது கி-லெஸ் என்ட்ரி. அதாவது சாவி இல்லாமல் இந்த ஸ்கூட்டரை பாதுகாப்பாக ஆன் செய்ய முடியும். மேலும் ஆண்டி-ஸ்கிட் தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறி இருக்கிறது.

நேர்த்தியான ரைடிங் அனுபவத்திற்காக, ஸ்கூட்டர்கள் இப்போது டூயல் டிஸ்க் பிரேக், புதிய எல்இடி டிஆர்எல் டிசைனுடன் வந்துள்ளன. இந்த ஸ்கூட்டர்களின் வரம்பைப் பொறுத்தவரை, Eco ஸ்கூட்டரை இப்போது 75-90 கிலோமீட்டர்கள் வரை செலுத்த முடியும் எனவும், ஸ்போர்ட் 110- 140 கிலோமீட்டர் வரையிலும், அதே நேரத்தில் SE ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் 150 முதல் 180 கிலோமீட்டர் வரை ஒரு முறை சார்ஜ் செய்தால் செல்லாம் என கொமாக்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் SE ஸ்கூட்டரில் முன்பக்க எல் இ டி இண்டிகேட்டர்கள், 3000 வாட் ஹப் மோட்டார், 50 AMP கன்ட்ரோலர், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இதிலுள்ள டி எஃப் டி எல்சிடி இன்ஸ்ட்ரூமண்ட் க்ளஸ்டரில் கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆன்-போர்டு நேவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், ஆன்-தி-மூவ் காலிங் ஆப்ஷன்கள், ரெடி-டு-ரைடு அம்சங்கள் ஆகியவை அடங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்