Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

BMW பைக்கை அப்படியே அமுக்கும் சிறப்பு கொண்ட Honda புது பைக்..!

Manoj Krishnamoorthi Updated:
BMW பைக்கை அப்படியே அமுக்கும் சிறப்பு கொண்ட Honda புது பைக்..!Representative Image.

ஹோண்டா பைக் என்றாலே அதன் அதிக நாள் உழைப்பு தான் ஞாபகம் வரும். ரொம்ப நாட்களாக பயன்படுத்தினால் சூப்பரான இன்ஜின் பர்ஃபாமனஸ் அளிக்கும்  திறன் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் எப்போதும் Honda வுக்கு என தனி இடத்தை கொண்டு இருக்கும்.  பட்ஜெட் விலையில் வரும் பைக்கே சிறந்த தரத்தில் இருக்கும்போது ஏறக்குறைய ஒரு காரின் விலைக்கு விற்பனையாக உள்ள பைக்கின் செயல்திறன் எப்படி இருக்கும் என எல்லோரின் மனதிலும் சுழல ஆரம்பித்து இருக்கும். மார்ச் மாதம் லான்ச் ஆக உள்ள Honda XL 750 Transalp பைக்கின் பர்ஃபாமன்ஸ், மைலேஜ் எப்படி இருக்கும் என்பதை பற்றி காண்போம். 

BMW பைக்கை அப்படியே அமுக்கும் சிறப்பு கொண்ட Honda புது பைக்..!Representative Image

Honda XL750 Transalp

நம்பிக்கையான Transalp மோட்டர் கொண்ட Honda XL650 Transalp 2007 வரை மார்க்கெட்டில் இருந்த மாடல் ஆகும். மீண்டும் அதே வெர்ஷனில் Honda XL750 Transalp வருவது பைக் பிரியர்களுக்கு இன்பமான செய்தி தான். இது ஜப்பானிய தயாரிப்பில் உருவான பேரலல் டுவின் லிக்விடு கூல் இன்ஜின் கொண்ட 755cc பைக் ஆகும். ஆப் ரோட் பைக்காக உருவாகியுள்ள XL750 Transalp 21 இன்ச் ஃபிரண்டு மற்ற்ம் 18 இன்ச் ரியர் wire spoke வீல் பொருத்தி இருப்பது சிறப்பு.  

XL750 Translap பைக் சாலையில் சாகசம் செய்ய நினைக்கும் பைக்கங்களுக்கு ஏற்ற ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் கொண்டது ஆகும். இதன் அதிகபட்ச பவர் 90 bhp யை 75 Nm டார்க்கில் வெளிப்படும். 6 ஸ்பீடு கியர் கொண்ட  Honda XL750 Transalp 270 டிகிரி க்ரேங் கொண்டுள்ளது. 

நல்ல அட்வென்சர்ஸ் பைக்கான Honda XL750 Transalp முன்பக்கத்தில் டுவின் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் சிங்கிள் ரோட்டார் உள்ளது, இது கரடுமுரடான சாலையில் செல்லும்போது நல்ல டிராவல் அளிக்கும். பாதுகாப்பு தரத்தில் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதை நிரூபிக்கும் வகையில் 2 லெவல் ABS, 5 லெவல் HSTC, 3 லெவல் இன்ஜின் பிரேக் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 லெவலில் செயல்படும் இன்ஜின் பவர் தான் அசத்தலான ஒன்றாகும். 

ஸ்டைலான லுக்கில் 3 அசத்தலான கலரில் (Matte Iridium Gray Metallic, Matte Ballistic Black Metallic, Ross White Tricolour) கிடைக்கிறது.  இதன் சிங்கிள் பாட்ஹெட்லைட்  மற்றும் நீளமான விண்ட் ஸ்கீரின் நல்ல டிசைனிங் லுக் அளிக்கும். 

ஸ்டைலான ஆப்ரோடு வாகனமாக உருவாகி உள்ள Honda XL750 Transalp பைக் 13-14 லட்சம் வரை இருக்கும். நகரங்களுக்கு ஏற்றதுபோல விலை மாறுப்படும் இந்த பைக் 2023 மார்ச் மாதம் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்