Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2.5 லட்சத்துக்கு Yamaha விற்க திட்டமிட்டுள்ள ஸ்கூட்டர் பற்றி தெரியுமா.....!

Manoj Krishnamoorthi Updated:
2.5 லட்சத்துக்கு Yamaha விற்க திட்டமிட்டுள்ள ஸ்கூட்டர் பற்றி தெரியுமா.....!Representative Image.

Yamaha என்ற உடனே நமக்கு RX பைக் தான் கண்முன்னே நிற்கும்.  இந்த பைக்கின் பிக்அப் மற்றும் பர்மான்ஸ் நம்மை Yamaha பிராண்டை மறக்காமல் செய்துவிட்டது. பைக்கில் இருக்கும் சூப்பர் இன்ஜின் பர்ஃபாமன்ஸ் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டரில் இருந்தது மேலும் Yamaha மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வரவைத்தது. அதுவும் Yamaha Fascino ஸ்கூட்டர் அளிக்கும் அதிகமான மைலேஜ் இந்தியாவில் வேறு எந்த ஸ்கூட்டரும் அளிக்கவில்லை.

இந்தியாவில் பெரும்பாலான  வாடிக்கையாளரை கொண்ட Yamaha உருவாக்கிய ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை தான் காண உள்ளோம். இதன் விலை அதிகமாக இருப்பது அப்படி என்ன இந்த ஸ்கூட்டரில் உள்ளது என்ற ஆவலை உருவாக்கி உள்ளது. இந்த பதிவில் Yamaha வெளியிட உள்ள Yamaha Neo ஸ்கூட்டரை பற்றி காண்போம். 

2.5 லட்சத்துக்கு Yamaha விற்க திட்டமிட்டுள்ள ஸ்கூட்டர் பற்றி தெரியுமா.....!Representative Image

Yamaha Neo

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் Yamaha நிறுவனம் கால்பதித்தது பைக் பிரியர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் புதிய வெளியீடு Yamaha Neo ஸ்கூட்டர், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை 2.5 லட்சம் என தெரியப்படுகிறது.ஒரு ஸ்கூட்டர் இவ்வளவு காஸ்டிலியா என்ற கேள்வி தான் இந்த ஸ்கூட்டரில் என்ன வித்தியாசமாக இருக்குனு பார்க்க வைக்கிறது. 

50cc ICE ஸ்கூட்டருக்கு மாற்றாக வெளிவரவுள்ள இந்த Yamaha Neo ஸ்கூட்டர் eco mode ல் 38.5 km செல்லும் திறன் கொண்டது. ஸ்ட்ராங்கான பேட்டரி பேக் அப் கொண்ட Yamaha Neo ஸ்டைலான லுக்கில் இருப்பது இதன் லான்ச் எப்போது என காத்திருக்க வைக்கிறது. 50cc இன்ஜின் வெளிப்படுத்தும் திறனை 2.5KW பவர் @ 136 Nm டார்கில் வெளிப்படுத்தும். அதேவேளையில் eco mode ல் 1.58 kW பவரை வெளிப்படுத்தும்.  

2.5 லட்சத்துக்கு Yamaha விற்க திட்டமிட்டுள்ள ஸ்கூட்டர் பற்றி தெரியுமா.....!Representative Image

146mm க்ரைண்ட் கிளியரன்ஸ் கொண்ட Yamaha Neo ஸ்கூட்டரில் சீட் உயரம் 790 mm, எனவே உயரம் குறைவானவர்களும் இதை கையாளுவது எளிமையாக இருக்கும். டெலிஸ்கோபிக் ஃபிரண்டு போர்க் மற்றும் ஹைடாராலிக் ரியர் சஸ்பன்ஷன் இந்த ஸ்கூட்டரை எல்லாவிதமான சாலைக்கும் ஏற்றதாக மாற்றும். 

அதிகபட்ச வேகம் 40kmph செல்லும் Yamaha Neo ஸ்கூட்டருக்கு டிஸ்க் டரம் செட்டப்பில் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வழவழப்பான சாலையிலும் வண்டி கிரிப்பாக நிற்கும் என எதிர்பார்க்கலாம். சிறிய LCD இன்ஸ்ட்ருமெண்ட் போனுடன் இணைக்கும் வகையில் லேட்டஸ் தொழில்நுட்பத்தில் டிசைன் செய்திருப்பது கவனத்தை  ஈர்க்கும். 

Yamaha Neo இந்திய பயன்பாட்டுக்கு தகுந்த பேட்டரி பேக் அப் உடன் ஜூன் 2023 இல் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.  ஒரு முறை சார்ஜ் செய்தால் 68 km செலும் திறனை இந்த ஸ்கூட்டர் அளிக்குமாம். ஜப்பானிய உற்பத்தியான இந்த Yamaha Neo ஸ்கூட்டரின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்