Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிராவல் செய்யணும்னு ஆசை.... ஆனால் கார்ல போனாலே வாந்தி வருதா.... இதோ உங்களுக்கான டிப்ஸ்… | Travel Sickness Causes And Remedies In Tamil

Manoj Krishnamoorthi Updated:
டிராவல் செய்யணும்னு ஆசை.... ஆனால் கார்ல போனாலே வாந்தி வருதா.... இதோ உங்களுக்கான டிப்ஸ்… | Travel Sickness Causes And Remedies In Tamil Representative Image.

பயணம் செய்வது என்றாலே நம் மனதிற்குள் ஒரு குதூகலம் கூத்தாடும். நம் மனதில் சந்தோஷம் அதிகரிக்க காரணம் தனிப்பட்ட மனதையே சார்ந்தது, ஆனால் ஒரு சிலரால் கார், பஸ் போன்ற வாகனத்தில் பயணம் செய்தாலே வாந்தி எடுக்கும் பிரச்சன உண்டு. உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா..? இது ஏன் ஏற்படுகிறது என்று என்றாவது சிந்தித்திருப்பீர். அதற்கான காரணம் மற்றும் எப்படி தடுப்பது என்ற வழிமுறையையும் பார்ப்போம். 

டிராவல் செய்யணும்னு ஆசை.... ஆனால் கார்ல போனாலே வாந்தி வருதா.... இதோ உங்களுக்கான டிப்ஸ்… | Travel Sickness Causes And Remedies In Tamil Representative Image

என்ன காரணம்? (Travel Sickness Causes And Remedies In Tamil)

மற்றவர்களுக்கு பயணத்தில் சந்தோஷம் என்றால் வாந்தி எடுக்கும் நபர்களுக்கு சங்கடம் தான் மிஞ்சும். தன்னை வருத்தி கொள்வதுடன் தன் சகபயணாளிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் நிலை உண்டாகும். இதில் பயணம் என்பது சாலை மார்க்கம், படகு, விமானம் எதுவாக இருந்தாலும் சரி,  இவர்களுக்கு பயணங்களில் ஏற்படும் சிக்கல் ஒன்று தான். இந்த பிரச்சனை மோஷன் சிக்னஸ் (Motion Sickness) அல்லது டிராவல் சிக்னஸ் (Travel Sickness) எனப்படும்.

இந்த பிரச்சனை வருவதற்கான காரணம் நம் மூளை தான்.என்ன மூளையில் பிரச்சனையா.. பயப்பட வேண்டாம். இது மூளை செயல்பாட்டில் நடக்கும் ஒரு சிறிய தகவல் கோளாறு ஆகும். அதாவது, நாம் செய்யும் காரியத்திற்கு பொதுவாக மூளை இப்படி செய்.. செய்யாதே... கட்டளையிடுவது வழக்கம். 

உதாரணமாக, நாம் பயணிப்பதாக எண்ணி கொள்ளுங்கள். நம் உடல் மூளைக்கு தான் ஒரே இடத்தில் இருப்பதாக அனுப்பும், கண் பார்க்கும் விஷயங்களை, காது கேட்கும் விஷயங்களை என ஒவ்வொரு உறுப்பு தன் தகவலை மூளைக்கு அனுப்பும். இந்த தகவலை சரிவர மூளை உணராமல் போவதால் மோஷன் சிக்னஸ் (Motion Sickness) ஏற்படும்.    

டிராவல் செய்யணும்னு ஆசை.... ஆனால் கார்ல போனாலே வாந்தி வருதா.... இதோ உங்களுக்கான டிப்ஸ்… | Travel Sickness Causes And Remedies In Tamil Representative Image

எப்படி தடுப்பது? (Travel Sickness Causes And Remedies In Tamil)

மோஷன் சிக்கனஸ் பிரச்சனைக்கான சரியான தீர்வு ப்ரஷ்ஷான காற்று ஆகும். ஆனால் இங்கு டிராவலிங்கில் ப்ரஷ்ஷான காற்று என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால் காரில் அல்லது விமானம் அல்லது பேருந்து போன்ற வாகனத்தில் எல்லாம் சமயமும்  ப்ரஷ்ஷான காற்று கிடைக்காது. ஆனால் இந்த பிரச்சனைக்கு எளிய வழி கீழே உள்ளது. 

பெரும்பாலும், மோஷன் சிக்னஸ் பிரச்சனை இருப்பவர்கள் பயணத்திற்கு முன் (1- 2 மணி நேரத்திற்கு முன்) வாந்தி வராமல் இருக்க மருந்து எடுத்து கொள்ளலாம். இதை மருத்துவரை அணுகி எடுத்து கொள்வது தான் புத்திசாலித்தனம் ஆகும். 

அடுத்தது, மூளைக்கு அமைதி வேண்டும். நாம் பயணம் செய்யும்போது நம் மூளைக்கு நாம் சவுகரியமாக உள்ளோம் என்பதை உணர்த்தினாலே போதும். இதற்கு சரியான இருக்கையைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்யுங்கள். முடிந்தளவு பின் சீட்டில் அமர்வதை தவிர்த்து கொள்ளலாம். 

இறுதியாக நம் மூளைக்கு நல்ல செயல்பட்ட அளிக்க வேண்டும். பயணம் ஆரம்பித்த பின் உங்களால் எவ்வளவு தொலைவில் வேடிக்கை பார்க்க முடியுமோ அவ்வளவு பாருங்கள். இல்லை புத்தகம் படிப்பது, மெல்லிய இசை கேட்பட்து போல சில விஷயத்தில் கவனம் செலுத்தினால் வாந்தி வருவதை ஓரளவு தடுக்கும். இதில் முக்கியமான விஷயம் உள்ளது எளிதில் செரிமானமாகும் உணவை குறைந்த அளவில் எடுத்தால் இந்த பிரச்சனையைத் தடுக்கும்.

  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்