Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,896.13
-47.55sensex(-0.07%)
நிஃப்டி22,134.85
-13.05sensex(-0.06%)
USD
81.57
Exclusive

Hyundai Aura Facelift  கார் நேரடியா இந்த காருக்கு தான் போட்டியாம்.....!

Manoj Krishnamoorthi Updated:
Hyundai Aura Facelift  கார் நேரடியா இந்த காருக்கு தான் போட்டியாம்.....!Representative Image.

ஜனவரி 23, 2023 (திங்கள்) அன்று Hyundai நிறுவனம் CNG மற்றும் பெட்ரோல் வேரியண்டில் Hyundai Aura Facelift  லான்ஸ் செய்தது. விற்பனைக்கு தயாராக உள்ள இந்த கார் தற்போது விற்பனையில் உள்ள பல கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லான்சான முதல் நாளே மார்க்கெட்டில் உள்ள வாகனங்களுக்கு போட்டியாக அமையவுள்ள Hyundai Aura Facelift  காரின் விலை, செயல்திறன் பற்றி பார்ப்போம்.

Hyundai Aura Facelift  கார் நேரடியா இந்த காருக்கு தான் போட்டியாம்.....!Representative Image

Hyundai Aura Facelift

Hyundai யின் லேட்டஸ் லான்ச் Hyundai Aura Facelift ஆகும்.  ஜனவரி 23 2023 அன்று லான்ஸ் செய்த இந்த காரின் விலை 6.29 லட்சத்தில் ஆரம்பிக்கிறது.Hyundai Aura Facelift 6 பெட்ரோல் வேரியண்டில் மற்றும் 2 CNG வேரியண்டில் விற்பனையாகிறது. குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களில் இந்த காருக்கு அதிகமான கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது 30 பாதுகாப்பு அம்சம் கொண்டதாக Hyundai சார்பாக கூறப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக வழக்கமாக இருக்கும் 4 ஏர்பேக்கை விட அதிகமாக 6 ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலே இரண்டாவது கார் நிறுவனமான Hyundai உருவாக்கிய Aura Facelift கார் Honda Amaze, Tata Tigor, Maruti Suzuki Dzire காரின் விற்பனைக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் CNG மூலம் இயங்கும் வேரியண்டாக உருவாகியுள்ளது. கிளாசிக்கான 6 நிறங்களில் கிடைக்கும் இதன் விலை 6.29- 8.57 லட்சம் ஆகும். 

1.0 l டர்போ இன்ஜின் கொண்ட Aura Facelift 100hp பவரை 172Nm டார்க்கில் வெளிப்படுத்தும். ஆனால் 1.2 l பெட்ரோல் இன்ஜின் 69hp பவரை 95 Nm டார்க்கை வெளிப்படுத்தும். ABS மற்றும் EBD பிரேக்கிங் சிஸ்டம் நமக்கு மலைப்பகுதி டிரைவிங் செல்ல ஏதுவாக அமையும். 

இண்ட்டிரீயரில் 8.0 இன்ச் டச் ஸ்கீரின், ஆப்பிள் கார்பிளே, ரியர் ஏசி வேண்டு, அட்ஜெஸ்ட் ரிய்ர் ஹைட்செட், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற ஆப்சன்கள் கவனிக்கப்படவேண்டியவை. அத்துடன் லேட்டஸ் தொழில்நுட்ப வசதிகளாக டைப்- C சார்ஜிங் போர், ஒயர்லேஸ் போன்ற ஆப்சன்களும் தற்போதைய நாட்களுக்கு அத்தியாவசியமாக பார்க்கப்படுகிறது. மேலும் தாராள சீட்டிங் மற்றும் ஃபோட் வெல் நமக்கு வசதியான பயணத்தை அளிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்