Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hyundai i10 Nios facelift என்னதான் புதுசா இருக்கு..? இந்த சீரியஸில் மட்டும் இத்தனை மாடல் கார்களா..!

Manoj Krishnamoorthi Updated:
Hyundai i10 Nios facelift என்னதான் புதுசா இருக்கு..? இந்த சீரியஸில் மட்டும் இத்தனை மாடல் கார்களா..! Representative Image.

Hyundai நிறுவனம் அண்மையில் லான்ச் செய்த கார் Hyundai i10 Nios  Facelift. பிரபலமான i10 மாடலின் அடுத்தடுத்த வெர்ஷனாக வரும் காரில் இருக்கும் மாற்றங்களை விட 2023 இல் லான்ச் Hyundai i10 Nios facelift காரில் டிசைனில் இன்னும் சில அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. 11,000 ரூபாய் புக்கிங் விலையில் விற்பனையாகும் i10 facelift காரில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.  

Hyundai i10 Nios facelift என்னதான் புதுசா இருக்கு..? இந்த சீரியஸில் மட்டும் இத்தனை மாடல் கார்களா..! Representative Image

Hyundai i10 Nios facelift

டிசைனிங் பொருத்தவரை  i10 Nios facelift காரின் முன்புற பம்பரில் பெரிய கிரில் அமைக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் Tata Tiago மற்றும் Maruti Suzuki Swift சாயல் கொண்டாலும் LED DRLs, LED tail lamp போன்றவை கவர்ச்சியான லுக் அளிக்கிறது. அதேவேளையில் இண்ட்ரீயர் டிசைனில் தாராளமாக சீட் மற்றும் மெட்டல் பினிஷ் செய்த டோர் ஹேண்டல் போன்றவை கிளாசிக்கான டிசைனாக உள்ளது. 

பர்ஃபாமன்ஸ் பொருத்தவரை 113.8 டார்க்கில் 83 PS பவரை வெளிப்படுத்தும் 1.2 l கப்பா பெட்ரோல் மோட்டார் தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் CNG வேரியண்டில் செயல்படும்  i10 Nios facelift கார் CNG வேரியண்டில் 69 PS பவரை 95.2 Nm டார்க்கில் வெளிப்படுத்தும். 1.2 பெட்ரோல் இன்ஜின் கொண்ட  i10 Nios facelift 5 ஸ்பீடு மேனுவல் கியர் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் டெரன்மிஷன் கொண்டது. 

இதன் லெதர் ரேப்டு ஸ்டேரிங் மற்றும்  6 ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதன் 15 இன்ச் அலாய் வீல் நல்ல ஸ்போர்ட்ஸ் லுக் அளிக்கிறது. ABS & EBD பிரேக்கிங் சிஸ்டம், ESC & ISoFIX வழக்கமான சீட் பெல்டை விட சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.  

புதியதாக ஸ்பார்க் கிரீன் நிறத்தில் அறிமுகமாகி உள்ள  i10 Nios facelift போலார் வெள்ளை, டைட்டன் கிரே, டைபோன் சில்வர், டீல் ப்ளு, ஃபிரி ரெட் கலர் வேரியண்டிலும் கிடைக்கிறது. லேட்டஸ் டெக்னாலஜி கொண்ட டிசைனில் 20.1- 20.7 km மைலேஜ் அளிக்கும் i10 Nios facelift காரின் விலை 5.68- 8.46 லட்சம் வரை இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்