Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மாருதியின் இந்த மாடல்களுக்கு இவ்வளவு டிமாண்டா..? | Maruti Suzuki

Nandhinipriya Ganeshan Updated:
மாருதியின் இந்த மாடல்களுக்கு இவ்வளவு டிமாண்டா..? | Maruti SuzukiRepresentative Image.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India). சமீபத்தில் கூட இந்நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) அதிகபட்சமாக 1,966,164 யூனிட்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்தது. இந்த நிலையில், இந்த கம்பெனியின் குறிப்பிட்ட மாடல் கார்களுக்காக லட்சக்கணக்கான முன்பதிவுகள் நிலுவையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிலுவையில் கிடக்கும் மாடல்:

மாருது சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா (Ertiga), டிசையர் (Dzire), கிராண்ட் விட்டாரா (Grand Vitara), ஜிம்னி (Jimny), பலேனோ (Baleno), ஃப்ரான்க்ஸ் (Fronx) மற்றும் எக்ஸ்எல்6 (XL6) போன்ற கார்களுக்கான முன்பதிவு ஆர்டர்கள் 380,000 நிலுவையில் உள்ளன. அந்தவகையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பல்நோக்கு காரானா (MPV) மாருதி சுஸுகி எர்டிகாவுக்கு (Maruti Suzuki Ertiga) சுமார் 100,000 முன்பதிவு நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, மாருதி கார் டிசைருக்கு (Maruti Suzuki Dzire) 40,000 முன்பதிவுகளும், நடுத்தர அளவிலான எஸ்யூவி மாருதி கிராண்ட் விட்டாராவுக்கான (Maruti Suzuki Grand Vitara) 34,000 முன்பதிவுகளும் நிலுவையில் உள்ளன. 

அத்தோடு, இதன் சிறந்த விற்பனை கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) பிரீமியம் ஹேட்ச்பேக் 20,000+ முன்பதிவுகளும், பிரீமியம் MPV மாருதி XL6 க்கு (Maruti Suzuki XL6) 9,000+ முன்பதிவுகளும் நிலுவையில் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மாடல்ஸ்க்கும் எகிறும் டிமாண்ட்:

மேற்கூறிய கார்களை தொடர்ந்து இன்னும் சில கார்களுக்கு டிமாண்ட் எகிறியுள்ளது. மாருதி சுஸுகி 5 கதவுகள் கொண்ட லைஃப்ஸ்டைல் ஜிம்னி எஸ்யூ காரை (Jimny SUV) அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாம். இதுவரை இந்த மாடல் கார் 24,500 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. 

அதேபோல், இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ள மற்றொரு சிறிய எஸ்யூவியான மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) இதுவரை 16,500 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. விலையை அறிவிக்கும் முன்னரே இத்தனை முன்பதிவுகளை பெற்றிருப்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டியே.

வாடிக்கையாளர் காத்திருப்பு காலம்:

கார்களுக்கான முன்பதிவு அதிகமாக இருப்பதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் டெலிவரிக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு 33-34 வாரங்கள், மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிற்கு 21-22 வாரங்கள், மாருதி சுஸுகி டிசைருக்கு 20-21 வாரங்கள், மாருதி சுஸுகிக்கு 16-17 வாரங்கள். கிராண்ட் விட்டாரா மற்றும் XL6க்கு 14-15 வாரங்களும் காத்திருக்க வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்