Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் மாருதியின் புது மாடல் கார்.. | Maruti Fronx Price in India

Nandhinipriya Ganeshan Updated:
அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் மாருதியின் புது மாடல் கார்.. | Maruti Fronx Price in IndiaRepresentative Image.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அதன் புதிய எஸ்யூவி ரக மாடலான மாருதி ஃபிரான்க்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. பலேனோவை அடிப்படையாக கொண்ட இந்த மாடலுக்கான புக்கிங் அப்போதிலிருந்து தொடங்கிவிட்டது. அந்தவகையில், இதுவரை 15,000 யூனிட் ஆர்டர்களை குவித்துள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் கடைசியில் மாருதி ஃபிரான்க்ஸ் மாடல் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த காரின் அம்சங்கள், இன்ஜின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் எரிபொருள் திறன் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இன்ஜின் விவரம்:

மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் காரில் மொத்தம் 1.2 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. 1.0-லிட்டர் இன்ஜினில் 5-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT விருப்பங்களும், 1.2-லிட்டர் எஞ்சின் 5-ஸ்பீடு MT மற்றும் 5-ஸ்பீடு AMT விருப்பங்களும் உள்ளன.

இன்ஜின்: 1

➺ இன்ஜின் வகை: 1.0லி டர்போ-பெட்ரோல் பூஸ்டர்ஜெட்
➺ பவர் (Power): 73.6 kW at 5,500rpm / 100.06 PS at5500rpm
➺ டார்க் (Torque): 147.6Nm at 2,000-4500
➺​​​​​​​ டிரான்ஸ்மிஷன்: 5MT/ 6AT
➺​​​​​​​ மைலேஜ்: MT - 21.5 kmpl/AT - 20.01 kmpl

இன்ஜின்: 2

➺​​​​​​​ எஞ்சின் வகை: 1.2லி டூயல் ஜெட், டூயல் விவிடி (நேச்சுரல் ஆஸ்பிரேட்டட்)
➺​​​​​​​ பவர் (Power): 66 kW at 6,000rpm / 89.73 PS at 6,000rpm
➺​​​​​​​ டார்க் (Torque): 113Nm at 4,400
➺​​​​​​​ டிரான்ஸ்மிஷன்: 5MT/ 5AMT
➺​​​​​​​ மைலேஜ்: MT - 21.79 kmpl/AMT - 22.89 kmpl

அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் மாருதியின் புது மாடல் கார்.. | Maruti Fronx Price in IndiaRepresentative Image

அம்சங்கள்:

அம்சங்களைப் பொறுத்தவரை, மாருதி ஃபிரான்க்ஸில் 360 டிகிரி கேமரா, HUD, 9 இன்ச் SmartPlay Pro+ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Apple CarPlay மற்றும் Android Auto இணைப்பு, க்ரூஸ் கண்ட்ரோல், UV-கட் கிளாஸ், Suzuki கனெக்ட் சூட், வயர்லெஸ் போன் சார்ஜிங் பேட், டூயல்-டோன் அலாய் வீல்கள், ஸ்பிலிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், குழந்தைகள் சீட்டிற்கான ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் ஆங்கர் பாயிண்ட் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், இந்த புதிய ஃபிரான்க்ஸ் கார் நெக்ஸா ப்ளூ, ஆர்க்டிக் ஒயிட், கிரன்டிவர் க்ரே, ஈஸ்டர்ன் பிரெளன், ஒப்புலென்ட் ரெட் மற்றும் ஸ்பிளென்டிட் சில்வர் போன்ற 6 விதமான சிங்கிள் டோன் கலர், மற்றும் ஈஸ்டர்ன் பிரெளன், ஒப்புலென்ட் ரெட், ஸ்பிளென்டெட் சில்வர் போன்ற 3 டூயல் டோன் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இத்துடன் ப்ளூயிஷ் பிளாக் நிறமும் சேர்ந்து வருகிறது.

டைமென்ஷன்:

இந்த மாடலானது 3,995mm நீளம், 1,765mm அகலம் மற்றும் 1,550mm உயரம் கொண்டது. மேலும், 2,520mm நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் இல்லாவிட்டாலும், 190 mm அளவு கொண்டுள்ளது. பூட் ஸ்பேஸ் கூட தாராளமாக இல்லை, வெறும் 308 லிட்டர் மட்டுமே. காம்பாக்ட் எஸ்யூவி 16 இன்ச் அலாய் வீல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், 5 பேர் அமரும் இந்த மாடலின் 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

காரின் எடையை பொருத்தவரை, 1.2 லிட்டர் இன்ஜின் உடன் 965 -975 கிலோ வரை இருக்கிறது. டர்போ சார்ஜ்டு வெர்ஷனை பொருத்தவரை 1015 முதல் 1060 கிலோ வரை இருக்கிறது.

மாருதி ஃபிரான்க்ஸ் விலை:

Maruti Suzuki Fronx மாடலின் விலை ரூ.6.75 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிராஸ்ஓவர் பிரிவில் இருந்தாலும் அறிமுகமானவுடன், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, டாடா பஞ்ச், சிட்ரோயன் சி3, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் மற்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:

எக்கச்சமான வசதிகளுடன் களமிறங்கும் டாடா அல்ட்ராஸின் சிஎன்ஜி மாடல்..

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்..

இந்த காருல இப்படி ஒரு சிறப்பம்சமா? ஸ்டைலான லுக்கில் டாடா நிறுவனத்தின் புது ரிலீஸ்..

கலக்கலான அம்சங்களுடன் கலமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் முதல் பைக்..

மும்பையில் ஆப்பிளின் முதல் அதிகாரப்பூர்வ ஸ்டோர்.! எங்க தெரியுமா..?

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்.. ஆப்பு அப்டேட்டும் கூட..

மாருதி சுசுகி கார் 1 லட்சம் ரூபாயில் எப்படி பெறுவது.? முழு விவரங்களும் இங்கே.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்