Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியா தயாரிப்பு கார்கள்..!

Manoj Krishnamoorthi Updated:
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியா தயாரிப்பு கார்கள்..!Representative Image.

இந்தியாவில் தயாரித்து நாட்டிலே அதிகமான கார்களை விற்பனை செய்யும் பெருமை மாருதி சுசூகிக்கு உண்டு. இவர்கள் தயாரிப்பில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான கையோடு இதன் விற்பனைக்கான பணி களைக்கட்டி உள்ளது, அதுவும் லான்ச் ஆனதுடன் வெளிநாடு வரை ஏற்றுமதி ஆகும் அளவு பெருமையை இந்த கார் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியா தயாரிப்பு கார்கள்..!Representative Image

2023 அட்டோ எக்ஸ்போ டெல்லி மற்றும் நொய்டாவில் நடைபெற்றது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கலின் புதிய படைப்பை அறிமுகம் செய்தது. அதில் மாருதி சுசூகி தனது Fronx காரைக் காட்சிப்படுத்தியது. பலேனோ காரின் தோற்றத்தில்  உருவான SUV ரக Fronx பலரின் கவனத்தை ஈர்த்தது. இதன் விற்பனை மிக விரைவில் நடக்கும் எனவும் அறியப்பட்டது. மேலும் இதன் புக்கிங் பணியும் ஆரம்பித்துவிட்டது. 

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் உருவான Fronx கார்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளது. இது மாருதி சுசூகி நிறுவனத்திற்கு மட்டுமில்லாமல் மொத்த இந்தியாவுக்கு பெருமையாக உள்ளது. 6 ஸ்பீடு கியர் கொண்டு 11197 cc Fronx கார் 17.5 kmpl மைலேஜ் அளிக்கும் எனவும், இதன் விலை 8.00 லட்சம் ரூபாயாக இருக்குமாம். 

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியா தயாரிப்பு கார்கள்..!Representative Image

அதுமட்டுமின்றி மாருதி சுசூகி உருவாக்கிய Grand Vitara காரும் 60 உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளது.  முதலில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள  Grand Vitara பின்னர் 60 நாடுகளிலும் விற்பனையை தொடங்கும். இதனால் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் உயரும், இந்தியாவின் வளர்ச்சி கூடும் என்பது தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்