Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பென்ஸ் காரையே தூக்கி சாப்பிடும் போல.. அந்தமாறி Nissan Kicks !

Manoj Krishnamoorthi Updated:
பென்ஸ் காரையே தூக்கி சாப்பிடும் போல.. அந்தமாறி Nissan Kicks !Representative Image.

பார்த்தவுடன் பளிச்சென தெரியும் கலர் வேரிய்ண்டில் இருக்கும் பிராண்டு Nissan. சாலையில் சென்றாலே தனித்துவமாக தெரியும் பர்ஃபாமன்ஸ் அளிக்கும் Nissan காருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. Nissan நிறுவனம் இந்தியாவில் இரண்டு மாடல் கார்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று Nissan Kicks, இதன் ஆன்ரோடு விலை, பர்ஃபாமன்ஸ், ஸ்பெசிஃபிகேஷன், வசதிகள் போன்றவற்றை காண்போம். 

பென்ஸ் காரையே தூக்கி சாப்பிடும் போல.. அந்தமாறி Nissan Kicks !Representative Image

Nissan Kicks

அசத்தலான 6 நிறங்களில் கிடைக்கும் Nissan Kicks SUV டைப் கார் ஆகும். பார்ப்பவரை கவரும் ஸ்டைலான தோற்றம் மற்றும் ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் தான் Nissan Kicks காரை தனித்துவமாக காட்டுகிறது. முன்புற டிசைனில் க்ரில் அமைப்பு, ரூப் ரெயில்கள், பூம்ராங் போன்றவற்றில் கவனம் செலுத்தி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

13.9- 15.8 km மைலேஜ் அளிக்கும் Nissan Kicks 1330- 1498 cc இன்ஜின் கொண்டது. 8 வேரியண்டில் விற்பனையாகும்  Nissan Kicks கார்கள் வெளிப்படுத்தும் பவர் 105bhp முதல் 154 bhp ஆகும். இதன் அதிகபட்ச டார்க் 8 வேரியண்டிலும் 142- 254 Nm ஆகும். இதன் டார்க் பர்ஃபாமன்ஸ் ஏறக்குறைய Mercedes-Benz A-Class Limousine 200 காருக்கு இணையாக உள்ளது. 

5 சீட் காரான Nissan Kicks பாதுகாப்பில் 4 ஏர்பேக்ஸ், இபிடி ABS பிரேக்கிங் சிஸ்டம் கொண்டு 3 ஸ்டார் பெற்று பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் அளிக்கும் Kicks ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் என வகை கியர் டெரன்ஸ்மிஷன் கொண்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் வரும் Nissan Kicks காம்பேக்ட் SUV கார் ஆகும். 

 XL 1.5, XV 1.5, XV Turbo 1.3,  XV Premium Turbo 1.3, XV Premium (O) Turbo, XV Premium Turbo 1.3 CVT போன்று 8 வேரியண்ட்டில்  Nissan Kicks கிடைக்கிறது. இதன் விலை 11.07-  18.13 லட்சமாக கிடைக்கிறது. இந்த கார் Kia Seltos, Hyundai Creta போன்ற மாடலின் போட்டியாக மார்க்கெட்டில் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்