Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

Tata Altroz EV காரின் விலை எவ்வளவு இருக்கும்…?

Manoj Krishnamoorthi Updated:
Tata Altroz EV காரின் விலை எவ்வளவு இருக்கும்…?Representative Image.

இந்தியாவில் பிரபலமான டாடா நிறுவனத்தின் அசத்தலான பிக் அப் பர்ஃபாமன்ஸ் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் கால்பதித்த டாடா நிறுவனம் Tiago  காரை வெளியிட்டது. அதை தொடர்ந்து 2023 இல் ஜனவரி மாதத்தில் 2023 Auto Expo வில் சில எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் Tata Altroz EV காரும் ஒன்று, இந்த காரின் சார்ஜிங் கெப்பாசிட்டி, பர்ஃபாமன்ஸ் போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். 

Tata Altroz EV காரின் விலை எவ்வளவு இருக்கும்…?Representative Image

Tata Altroz EV

ஜனவரி மாதத்தில் லான்ச் செய்ய உள்ள Tata Altroz EV கார் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்சன் கொண்டது. 30.2 kWh பேட்டரி பேக் அப் கொண்ட Altroz EV முழுமையாக சார்ஜ் செய்தால் 312 km தூரம் செல்ல கூடியது. எலக்ட்ரிக் கார் என்பதால் வரும் சந்தேகம் இதன் பேட்டரி தண்ணீர் பட்டாலும் செயல்படுமா..? அந்த குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில் வாட்டர் பூருஃப் பேட்டரி மற்றும் IP67- ரேட்டு டஸ்ட் புரூஃபாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

129 PS எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட Altroz EV அதிகபட்சம் 120 kmph செல்லும் திறனை பெற்றது. 0-100 Kms செல்ல வெறும் 12.63 வினாடிகள் மட்டுமே ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் எலக்ட்ரிக் காராக கருதும் Altroz EV ஆட்டோமெட்டிக் கியர் ஆப்சன் என்பதால் உடனடி ஆக்ஸ்லரேசன் அளிக்கும் திறன் கொண்டது. 

இண்டீரியர் டிசைனிங் பொருத்தவரை வழக்கமான அனைத்து அடிப்படை வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 இன்ச் டச் ஸ்கீரின் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சுமார் 10 மணி நேரம் பேட்டரி பேக் அப் அளிக்கும் Altroz EV கார் ziptron powertrain பேட்டரி மூலம் உருவானது.  ஜனவரி 13 இல் அறிமுகமாக உள்ள Tata Altroz EV 14 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்