Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Form 35 : நீங்க லோனில் வண்டி வாங்க இத செய்த மட்டுமே வண்டி உங்களுடையது.... இல்லையென்றால்..?

Manoj Krishnamoorthi Updated:
Form 35 : நீங்க லோனில் வண்டி வாங்க இத செய்த மட்டுமே வண்டி உங்களுடையது.... இல்லையென்றால்..?Representative Image.

இன்றைய காலகட்டத்தில் கார் பைக் வாங்கும் பெரும்பாலானோர் லோன் மூலம் தான் வாங்குவர். லோனில் வாங்கும் வாகனங்கள் ட்யூ முடியும் வரை அதற்கான சந்தாக் கட்டி லோனை முடிக்க வேண்டும் என்று தான் தெரியும். ஆனால் லோன் முடிந்த பிறகும் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. அது என்ன..? அப்படி அந்த விஷயத்தை செய்யாமல் விட்டுவிட்டா... ஏதேனும் பிரச்சனை வருமா....? போன்ற கேள்வி உங்கள் மனதிற்குள் எழுந்திருக்கும். அந்த கேள்விக்கு பதிலாக இந்த பதிவு அமையும். 

Form 35 : நீங்க லோனில் வண்டி வாங்க இத செய்த மட்டுமே வண்டி உங்களுடையது.... இல்லையென்றால்..?Representative Image

லோனில் வாங்கும் வாகனம் (Loan Vehicle Agreement Removal)

பொதுவாக லோனில் வாங்கும் வாகனம் நம்முடையது என்றாலும் அது ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு பாத்தியப்பட்டது ஆகும். ஆம்,..இது பற்றிய தகவல் ஆர்சியில் இருக்கும்.  பொதுவாக நாம் எந்த வாகனம் வாங்கினாலும் ஆர். டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்யும்போது நம் ஆர்சியில் எந்த மூலம் வாங்குகிறோம் என குறிக்கப்பட்டிருக்கும். அதாவது, லோன் மூலம் வாங்கினால் வண்டியில் ஆர்சியில் ஃபைனான்ஸ்டு பை என எழுதப்பட்டு இருக்கும் இடத்தில் லோன் வாங்கிய நிறுவனத்தின் பெயர் இருக்கும். 

இவ்வாறு லோன் வாங்கிய நிறுவனத்தின் பெயர் இருப்பது வாகனத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும் வாகனம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு பாத்தியப்பட்டது ஆகும் என்பதாம். இதை Hypothecation என்றும் கூறலாம். இந்த  Hypothecation யை தான் நாம் லோன் முடிந்த பிறகு ஆர்சியில் இருந்து அகற்ற வேண்டும். 

Form 35 : நீங்க லோனில் வண்டி வாங்க இத செய்த மட்டுமே வண்டி உங்களுடையது.... இல்லையென்றால்..?Representative Image

எப்படி செய்வது..? (Rto Hypothecation Removal Process Tamil)

நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்...? லோன் முடிந்த பிறகு ஃபைனான்ஸ் நிறுவனம் நீக்கிவிடும் அல்லவா என்று ஆனால் அது நம் கடமை ஆகும். நான் ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கலாம்...? ஒருவேளை நம் வாகனம் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பணம் நமக்கு வராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு போய்விடும். 

இப்போது உங்கள் நிலைமை புரியும் என உணர்கிறோம். வாருங்கள் ஆர்சியில் இருக்கும் Hypothecation யை எப்படி நீக்குவது என்பதை பார்ப்போம். 

பொதுவாக மக்கள் இடையில் ஆர். டி. ஓ அலுவலக வேலை என்றால் புரோக்கர் எதிர்பார்ப்போம். இந்த Hypothecation நீக்குவது சுலபமானதாகும், நாமே ஆர். டி. ஓ ஆபீஸ் சென்று விண்ணப்பிக்கலாம். ஆர். டி. ஓ ஆபிஸ் செல்வதற்கு முன் நாம் லோன் வாங்கிய நிறுவனத்திடம் இருந்து NOC (No Objection Certificate), ஃபார்ம் 35 பெற்று கொள்ள வேண்டும். இதை வாங்க நாம் லோனை முழுமையாக செலுத்தினாலே போதும், அப்ளை செய்த 2- 3 வாரங்களில் கிடைத்துவிடும்.

Form 35 : நீங்க லோனில் வண்டி வாங்க இத செய்த மட்டுமே வண்டி உங்களுடையது.... இல்லையென்றால்..?Representative Image

பின் NOC, ஃபார்ம் 35 (Form 35), பான் கார்டு, நகல், ஒரிஜினல் ஆர்சி, வண்டியின் இன்சூரன்ஸ் காப்பி, நடப்பு புகை சான்று, இருப்பிட சான்று போன்ற ஆவணங்களுடன் ஆர்டிஓ ஆபிஸ் செல்ல வேண்டும்.  நம் ஆவணங்களை ஆர் டி ஓ அலுவலகத்தில் சரிபார்ப்பர்.

நம் ஆவணங்கள் சரியாக இருந்தால் இதற்கான கட்டணத்தை (100 ரூபாய்) செலுத்தி, பின் அவர்கள் கூறும் தேதியில் புதிய ஆர்சியை வாங்கி கொள்ளலாம். இப்போது நீங்கள் கேட்கலாம், இதை ஆன்லைனில் செய்ய முடியாதா..? இதை ஆன்லைனில் செய்ய Vehicle-Related Services என்ற தளத்தை பயன்படுத்தலாம். இருப்பினும் முழுமையான பணிகளை முடிக்க  நேரில் ஒரு முறை ஆர். டி. ஓ அலுவலகம் செல்ல வேண்டும். ஒருவேளை Hypothecation நீக்காமல் வண்டியை விற்கலாம் என நினைத்தால் அது முடியாது. எனவே லோனில் வாகனங்களை வான்கி இருந்தால் உங்கள் கடன் முடிந்த பின் Hypothecation கொள்வதே நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்