Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ration Card New Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..! ஜூன் 30 ஆம் தேதிக்குள் இது கட்டாயம் பண்ணிருக்கனும்…

Gowthami Subramani May 29, 2022 & 15:05 [IST]
Ration Card New Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..! ஜூன் 30 ஆம் தேதிக்குள் இது கட்டாயம் பண்ணிருக்கனும்…Representative Image.

Ration Card New Update: ரேஷன் கார்டு மூலம் நாடு முழுவதும் மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் அட்டை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த அட்டையில், எந்த வித மோசடியும் நடைபெறாமல் இருப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன (Ration Card New Update).

அவற்றில் ரேஷன் கார்டு சம்பந்தப்பட்டவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில், அனைவரின் ஆவணங்களும் ஆதார் கார்டில் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரேஷர் கார்டையும் ஆதார் எண்ணை வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது (How to Link Ration and Aadhar Card Tamil).

ஆதார் எண்ணுடன் ஆன்லைனில் இணைக்கும் முறை

ரேஷன் கார்டை ஆன்லைன் முறையில் ஆதார் கார்டை இணைக்கலாம்.

ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளமான uidai.gov.in என்ற இணையதளத்தில் இணைக்கவும் (How To Link Ration Card With Aadhar Card Online).

அதில், Start now என்பதைக் க்ளிக் செய்து, அதில் உங்களது முகவரி மற்றும் மற்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு, Ration Card Benefit என்பதைக் க்ளிக் செய்து அதில் ஆதார் எண், ரேஷ கார்டு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். மேலும், விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரக் கூடிய ஓடிபி-ஐ நிரப்ப வேண்டும். அதன் பிறகு, ரேஷன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விடும்.


Representative Image. ரேஷன் கார்டு உங்கக்கிட்ட இருக்கா..? இனி இப்படித்தான் பொருள்கள் வாங்க முடியும்….!


ஆஃப்லைனில் இணைக்கும் முறை (How To Link Ration With Aadhar Card Offline)

ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்திற்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பு போன்றவையும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படும்.


Representative Image. கிரிப்டோகரன்சில பணம் போடுவதற்கு முன்பு இத கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்…!


இதனால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலோ, அல்லது ஆஃப்லைனிலோ ரேஷன் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்