Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,247.91
304.23sensex(0.42%)
நிஃப்டி22,266.95
119.05sensex(0.54%)
USD
81.57
Exclusive

இனி தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கா?; இன்றைய நிலவரம் இதோ! 

KANIMOZHI Updated:
இனி தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கா?; இன்றைய நிலவரம் இதோ! Representative Image.

தொடர்ந்து தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 5,086-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  80 ரூபாய் அதிகரித்து 40,688 ரூபாய்க்கும்  விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் அதிகரித்து 5,488 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 43,904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

உலக பங்குச்சந்தைகள் பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், தீயாய் பரவி வரும் கொரோனா தொற்று அதனை மேலும் கடினமாக்கியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக பங்குச்சந்தைகளில் சரிவும், டாலர் மதிப்பில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடும் முதலீட்டாளர்கள், தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளனர். 

ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1797க்கு மேல் வர்த்தகமாகிறது. ஸ்பாட் வெள்ளியின் விலை 23.75 டாலராக தொடர்ந்து வருகிறது. கடந்த முறை அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயத்திய போது கூட தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழவில்லை. ஆனால் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை