Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Layoffs: 10000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சுந்தர் பிச்சை முடிவு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்...

Nandhinipriya Ganeshan Updated:
Google Layoffs: 10000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சுந்தர் பிச்சை முடிவு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்...Representative Image.

அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய நாளில் இருந்து அந்நாட்டு டெக் நிறுவனங்கள் அதிகளவிலான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. அதோடுமட்டுமல்லாமல், ரெசிஷன் காரணமாக டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் சரிந்து வருகிறது. இதையெல்லாம் சமாளிப்பதற்காகவே டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகின் நம்பர் ஒன் நிறுவனங்களே கொத்துக் கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தான்.

Google Layoffs: 10000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சுந்தர் பிச்சை முடிவு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்...Representative Image

அதன்படி, கடந்த மூன்று மாதத்தில் மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், மெட்ட, டிவிட்டர், நெட்பிளிக்ஸ், சேல்ஸ்போர்ஸ் என பெரும்பாலான டெக் நிறுவனங்கள் அதிகளவில் பணிநீக்கங்களை செய்துள்ளன. தற்போது இந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்த வந்த நிலையில், தற்பொது சுமார் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை சில மாதங்களுக்கு முன்பே நிறுவனம் அதிகப்படியான லாபத்தை பெறவில்லை என்றால், பணிநீக்கம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
 

Google Layoffs: 10000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சுந்தர் பிச்சை முடிவு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்...Representative Image

இருப்பினும், பல இக்கட்டான காலக்கட்டத்திலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர்த்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை மோசமாகி வருவதால், சரியாகப் பணியாற்றாத Poor Performing பிரிவில் இருக்கும் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 

அதேசமயம், கூகுள் நிர்வாகம் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய போனஸ் மற்றும் பங்கு அளிப்பு விகிதம் ஆகியவற்றையும் அளிப்பதையும் குறைக்க உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் மொத்தம் 187000 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது, இந்த எண்ணிக்கையில் 5-6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இம்முடிவின் மூலம் கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்