Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

செப்டம்பர் மாதத்திற்கு ஜிஎஸ்டி 26% அதிகமாம்.. அப்ப மொத்த தொகை எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani October 01, 2022 & 17:00 [IST]
செப்டம்பர் மாதத்திற்கு ஜிஎஸ்டி 26% அதிகமாம்.. அப்ப மொத்த தொகை எவ்வளவு தெரியுமா..? Representative Image.

ஜிஎஸ்டி வசூல் மாதந்தோறும் உயர்ந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. அதன் படி, தொடர்ந்து ஏழாவது மாதமாக கடந்த செப்டம்பர் மாதத்தின் ஜிஎஸ்டி வரி ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 26% அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கு ஜிஎஸ்டி 26% அதிகமாம்.. அப்ப மொத்த தொகை எவ்வளவு தெரியுமா..? Representative Image

ஜிஎஸ்டி வரி விகிதம்

இந்தியாவின் மறைமுக வரி சீர்திருத்தத் துறையில், ஜிஎஸ்டி அதாவது சரக்கு மற்றும் சேவைக்கான வரி முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் படி, நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மத்திய மற்றும் மாநில வரிகளை ஒரே வரிகளாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிஎஸ்டி வரிவிகிதம் ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது பொருள்களின் மீதான ஒட்டுமொத்த வரிச்சுமை குறைப்பதற்கு இது உதவினாலும், ஜிஎஸ்டி வரி குறித்த சர்ச்சைகள் இன்றும் எழுந்து தான் வருகின்றன.

செப்டம்பர் மாதத்திற்கு ஜிஎஸ்டி 26% அதிகமாம்.. அப்ப மொத்த தொகை எவ்வளவு தெரியுமா..? Representative Image

ஜிஎஸ்டி அறிமுகம்

பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி என அழைக்கப்படும் ஜிஎஸ்டி வரி, பொருளாதா வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதன் மூலம், பொருளாதார மேம்பாட்டினை எளிதாக கவனிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதத்திற்கு ஜிஎஸ்டி 26% அதிகமாம்.. அப்ப மொத்த தொகை எவ்வளவு தெரியுமா..? Representative Image

மாதந்தோறும் ஜிஎஸ்டி வசூல்

மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, அரசுக்கு வரக்கூடிய ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், முந்தைய மாதத்திற்கான விவரங்களை வெளியிடும். அதன் படி, இன்று செப்டம்பர் 2022-க்கான வரிவசூல் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் வருவாயாக, ரூ.25,271 கோடியாகவும், ஏனைய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வசூல் வருவாய் ரூ.31,813 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்