Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டு கடனுக்கான வட்டி ஏற இறங்க இது தான் காரணமா? | Home Loan Public vs Private Bank

Priyanka Hochumin Updated:
வீட்டு கடனுக்கான வட்டி ஏற இறங்க இது தான் காரணமா? | Home Loan Public vs Private BankRepresentative Image.

மக்களுக்கு எந்த வங்கியில் வீட்டு கடன் வாங்க விரும்பும் என்று ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு பேசிக் ஹோம் லோன் என்ற ஃபின்டெக் நிறுவனம் சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அதில் இந்தியாவின் முக்கியமான 25 நகரங்களில் வாழும் மக்களிடம் கேட்ட பின் வெளியிட்ட தகவல் இது தான்.

47% பேர் - பொதுத்துறை வங்கியிலும் 

27% பேர் - தனியார் வங்கியிலும்

24% பேர் - சேமிப்பு மற்றும் முதலீடு மூலம்

1% பேர் - வங்கிசாரா நிதி நிறுவனம் மூலம் வீட்டுக் கடன் வாங்க விரும்புவதாகக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Also Read - தனியார் அல்லது பொதுத்துறை வங்கி...இதுல எதில் லோன் வாங்குறது? | Home Loan Private vs Public Bank

வீட்டு கடனுக்கான வட்டி ஏற இறங்க இது தான் காரணமா? | Home Loan Public vs Private BankRepresentative Image

வட்டி குறையும் போது யார் பெஸ்ட்?

வங்கியில் மக்கள் வாங்கும் வீட்டு கடன், RBI வட்டியை குறைக்கும் போது குறைத்து தான் ஆகணும். அப்பொழுது யார் அதிகமா குறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

2019 பிப்ரவரி - 2019 நவம்பர்: இந்த காலகட்டத்தில் ஏற்கனவே வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பொதுத்துறை வங்கி 0.94 சதவீதமும், தனியார் வங்கிகள் 0.54 சதவீதமும் குறைத்துள்ளனர். அதே நேரத்தில் புதிதாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு பொதுத்துறை வங்கியானது 1.51 சதவீதமும், தனியார் வங்கிகள் 1.76 சதவீதமும் குறைத்துள்ளனர்.

2020 மார்ச் - 2020 நவம்பர்: அதாவது கோவிட் 19 தொற்று காலத்தில் ஏற்கனவே வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பொதுத்துறை வங்கி 0.69 சதவீதமும், தனியார் வங்கி 0.59 சதவீதமும் குறைத்துள்ளனர். இதுவே புது வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு பொதுத்துறை வங்கியானது 0.68% மற்றும் தனியார் வங்கி 1.34% குறைத்துள்ளது.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், RBI வட்டியை குறிக்கும் போது புதிதாக வீட்டு கடன் வாங்க நினைக்கும் மக்களை கவர்ந்திலுக்க தனியார் வங்கிகள் வட்டியை குறைவாக தருகின்றனர். இது கணக்கெடுப்பு தானே தவிர எல்லா வங்கியும் இப்படி இருக்காது.

Also Read - ரிசர்வ் வங்கியால் மீண்டும் மக்கள் அவதி...ரெப்போ விகிதத்தின் அதிரடி தாக்கம் | RBI Repo Rate Hike  

வீட்டு கடனுக்கான வட்டி ஏற இறங்க இது தான் காரணமா? | Home Loan Public vs Private BankRepresentative Image

முடிவு செய்தது RBI....

இப்படி பல தில்லு முல்லுகள் நடப்பதால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே RBI ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டு கடனுக்கான வட்டியை ரெப்போ விகிதத்துடன் இணைக்கச் சொல்லியிருக்கிறது. எனவே, இனிமேல் ரெப்போ விகிதத்திற்கு ஏற்ப தான் வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டிகள் மாறும்.

அதனால் மக்களே வட்டி கம்மியா இருக்குன்னு பார்க்காதீர்கள். வட்டி என்பது டிமாண்ட் அண்ட் சப்ளையைப் பொறுத்து மாறுபடும். முதல் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டுமே கம்மியா இருக்கும், அதுக்கு பிறகு கண்ணு பிதுங்கி விடும் வட்டியை கட்டி முடிப்பதற்குள். அதுனால பொதுத்துறை அல்லது தனியார் வங்கியில் இருக்கும் சாதகம் மற்றும் பாதகம் பற்றி சொல்றத சொல்லியாச்சு. இதுக்கு மேல நீங்க தான் பாத்து கவனமா முடிவு எடுக்கணும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்