Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாடாவில் இணைந்த பிரபல நிறுவனம்… இனி இதுவும் டாடா ப்ராடக்ட் தான்…!

Gowthami Subramani Updated:
டாடாவில் இணைந்த பிரபல நிறுவனம்… இனி இதுவும் டாடா ப்ராடக்ட் தான்…!Representative Image.

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக விளங்கும் டாடா கன்ஸ்யூமர் நிறுவனமானது தற்போது புதிதாக ஒரு நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.

டாடாவில் இணைந்த பிரபல நிறுவனம்… இனி இதுவும் டாடா ப்ராடக்ட் தான்…!Representative Image

7,000 கோடி ரூபாய்க்கு

முன்னணி தொழில் நிறுவனமான டாடா, கன்ஸ்யூமர் பிஸ்லெரி நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. இதனை, ரூ.7,000 கோடிக்கு வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பே தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட், லிம்கா உள்ளிட்ட குளிர்பான பிராண்டுகளை கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்பனை செய்த நிலையில், தற்போது பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் –க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவில் இணைந்த பிரபல நிறுவனம்… இனி இதுவும் டாடா ப்ராடக்ட் தான்…!Representative Image

ஒப்பந்தத்திற்கு பிறகே

இந்நிலையில், டாடா மற்றும் பிஸ்லெரி நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது இருக்கும் நிர்வாகக் குழுவே, நிறுவனத்தை நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஸ்லெரி நிறுவனத்தின் தலைவர் சௌஹான் தெரிவித்ததாவது, “மிகப்பெரிய வாட்டர் நிறுவனமாக விளங்கும் பிஸ்லெரியை, அடுத்தகட்ட விரிவாக்கத்துக்குக் கொண்டு செல்ல, தனது குடும்பத்தில் எவரும் தயாராக இல்லை. தனது உடல்நிலையானது பிசினஸை கவனிக்கும் அளவு இல்லை. மேலும், தனது மகள் ஜெயந்திக்கும் பிசினஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஆர்வம் இல்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.

டாடாவில் இணைந்த பிரபல நிறுவனம்… இனி இதுவும் டாடா ப்ராடக்ட் தான்…!Representative Image

பல நிறுவனங்களுக்கு மத்தியில் டாடா

சில ஆண்டுகளுக்கு முன், பிஸ்லெரி நிறுவனத்தை வாங்க, பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. அதில் ரிலையன்ஸ், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். இருப்பினும், டாடா நிறுவனமே பிஸ்லெரி நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டு பேச்சு வார்த்தைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

டாடாவில் இணைந்த பிரபல நிறுவனம்… இனி இதுவும் டாடா ப்ராடக்ட் தான்…!Representative Image

பிஸ்லெரிக்குச் சொந்தமானது

பிஸ்லேரி இத்தாலி பிராண்டாக இருக்கும் சமயத்தில், 1965 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. அதன் பின், சௌஹான் இதனை 1969 ஆம் ஆண்டு வாங்கினார். சமீபத்திய அறிக்கை படி, இந்த நிறுவனமானது தண்ணீர் சுத்திகரிப்பு உட்பட 122 ஆலைகளை இயக்கி வருகிறது. இதில், 13 ஆலைகள் பிஸ்லெரிக்கு சொந்தமானதாகும்.

இத்தகைய பிஸ்லெரி நிறுவனத்தினை அடுத்துக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் பிஸ்லெரி நிறுவனத்தினை சௌஹான் டாடாவிடம் வழங்க உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்