Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SBI Latest News for Customers: உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா...அதை தொடவே தொடாதீங்க...அரசாங்கத்தின் எச்சரிக்கை!

Priyanka Hochumin May 23, 2022 & 15:25 [IST]
SBI Latest News for Customers: உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா...அதை தொடவே தொடாதீங்க...அரசாங்கத்தின் எச்சரிக்கை!Representative Image.

SBI Latest News for Customers: SBI வங்கி பயனர்களுக்கு அரசு அறிவித்த எச்சரிக்கை, எஸ்பிஐ வங்கி அனுப்பியது போல் வரும் எந்த மெசேஜ் மற்றும் போன் காலுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. 

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப மோசடிகளில் இதுவும் ஒன்று. மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வங்கியில் போட்டு சேமித்து வருகின்றனர். அதையும் நூதனமாக திருட சில கோஷ்டிகள் இருக்கின்றன. மக்களும் ஏமாறி தங்களின் பணத்தை இழந்து அவதிப்படுகின்றனர். நீங்கள் புதிதாக ஒரு வங்கியில் அக்கௌன்ட் ஓபன் செய்தால், அதில் சில விதிமுறைகளைத் தெரிவித்திருப்பார்கள். உங்களுடைய அக்கௌன்ட்டில் இருந்து பணம் கிரெடிட் மற்றும் டெபிட் ஆனதைத் தவிர, வங்கியில் இருந்து எந்த போன் காலும், மெசேஜூம் வராது என்று குறிப்பிட்டு இருக்கும். ஆனால் மக்கள் அதை மறந்து இந்த மோசடி கும்பலிடம் மாட்டிக்கொண்டு ஏமாறுகின்றனர். 

எல்ஐசி பட்டியலைப் பற்றி முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது….? சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

வரும் மெசேஜ் | SBI Latest News Today 

SBI வங்கி பயனர்களுக்கு, வங்கி அனுப்புவது போல் மோசடி கும்பல் அனுப்பும் மெசேஜ் இதுவே. "Dear A/c holder SBI BANK documents has expired A/c will be blocked Now Click http://sbikvs.II Update by Net Banking." இதில் என்ன கூறியிருக்கிறது என்றால், அன்பான அக்கௌன்ட் ஹோல்டர் உங்களின் வங்கி ஆவணங்கள் காலாவதியாகிவிட்டது. எனவே, கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. நீங்கள் அந்த லிங்கை தொட்டதும் உங்களுடைய முழு ஆவணங்களின் தகவல்களை சேகரித்து விடுவார்கள். ஒரு வேளை போன் செய்தால், உங்களுடைய ஆதார் எண், அக்கௌன்ட் எண், OTP போன்ற முக்கிய விவரங்களை கேட்டுக்கொண்டு அலேக்காக உங்களின் அக்கௌன்ட்டில் இருந்து உங்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துவிடுவார்கள். எனவே, உங்களுக்கு வரும் மெசேஜ், ஈமெயில், போன் கால் ஆகியவற்றில் மிக கவனமாக பதிலளியுங்கள். உங்களுக்கு தெரியாதவர்கள் மற்றும் சந்தேகமானவர்களாக இருந்தால் உடனே வெளியேறிவிடுங்கள். 

பிசினஸ்-ல தோல்வியையே சந்திக்கிறீங்களா..? இத ஃபாலோப் பண்ணுங்க… இனி என்னைக்கும் வெற்றி தான்

இதில் உள்ள பிழை | SBI Bank Latest News

நீங்கள் இந்த மெசேஜை கவனித்தால் அதில் உள்ள பிழை உங்களுக்கு தெரியும். இதில் கிராமர் மிஸ்டேக் உள்ளது. உங்களுக்கு ஒரு வேலை சந்தேகமாக இருந்தால் இதற்கு முன்பு வந்த வங்கி மெசேஜ் அல்லது ஈமெயிலை சரி பார்க்கவும். பின்பு உங்களுக்கு சந்தேகம் தீர்ந்துவிடும். மேலும் அதில் வரும் இணைப்புகளை அழுத்தியவுடன் KYC சமர்ப்பிக்கும் படி வலியுறுத்தி வருகின்றனர். 

PIB விடுத்த எச்சரிக்கை | SBI Latest News for Customers

இந்த முறையில் அடுத்தடுத்து மக்கள் ஏமாறியதைத் தொடர்ந்து, SBI பயனர்களை எச்சரிக்கும் வகையில் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (PIB) அவர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் எஸ்பிஐ பயனர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், உங்களுக்கு பகிரப்படும் ஈமெயில் மற்றும் SMS-களுக்கு பர்சனல் மற்றும் வங்கி தகவல்களைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்களுக்கு இந்த தகவல் கிடைக்கத்தால் உடனடியாக report.phishing@sbi.co.in என்ற ஈமெயிலுக்கு புகைரளியுங்கள். உங்கள் கோரிக்கையை ஏற்று வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.  

இந்த ஐந்து விஷயம் தெரிஞ்சா… கண்டிப்பா பிசினஸில் வெற்றி உறுதி…!

உடனுக்குடன் செய்திகளை (Business News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்