Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...

Gowthami Subramani Updated:
பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image.

டிஜிட்டல் முறையில் மாறும் இந்த உலகில் அனைவரும் ஆன்லைன் பிஸ்னஸை நோக்கிப் பயணிக்கிறார்கள். இன்றைய நவீன உலகில் ஆன்லைன் பிசினஸ் ஆனது அனைவராலும் செயல்படக் கூடிய ஒன்றாகும். குறிப்பாக, இதற்கு அதிக செலவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு இது மிகவும் பயன்படக் கூடிய ஒன்றாக அமையும். பெண்கள் வேலைக்கு வெளியில் செல்வது கடினமாக இருக்கலாம். இந்த ஆன்லைன் பிசினஸ் மூலம் பெண்கள் வீட்டிலிருந்தே எளிதாக சம்பாதிக்கலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

பெண்களுக்கான சுயதொழில்

சுயதொழில் செய்யக் கூடிய பெண்கள் பொதுவாக வருமானத்திற்காக மட்டும் செய்வதில்லை. அவர்களுக்கு நம்பிக்கையை விதைப்பதே முக்கிய காரணமாக அமையும். இது அவர்களைச் சுற்றியுள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துவதாகவும் அமைகிறது. அந்த வகையில், வீட்டிலிருந்தே சுய தொழில் சம்பாதிக்க பெண்களுக்கான சில யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

யூடியூப் பதிவு

கொரோனா காலத்தில், யூடியூப் பெருமளவு கைகொடுத்ததாக இருந்துள்ளது. ஏனெனில், கொரோனா ஊரடங்கு காரணமாக எத்தனையோ பேர் வேலையிழந்து காணப்பட்ட நிலையில், யூடியூப்-ல் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் அதிகமாக வருமானம் ஈட்டினார்கள். எத்தகைய செலவும் இல்லாமல், சமூக வலைதளமான யூடியூப்-ல் வீடியோக்களைப் பதிவிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

வலைப்பதிவின் மூலம்

பேச்சாற்றல் உள்ளவர்கள் யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுவது போல, எழுத்து ஆர்வம் கொண்டவர்கள் வலைப்பதிவு மூலம் வருமானம் ஈட்டலாம். வலைப்பதிவை, உங்களுக்குப் பிடித்த, மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமையக் கூடியவையாய் பயன்படுத்தலாம். அந்த வகையில், லைஃப்ஸ்டைல், சமையல் குறிப்புகள், உடல்நலம் குறித்த தகவல்கள் போன்றவை பெரும்பாலும் மக்களால் விரும்பப்பட்டு தேடப்படுவது. இதற்கு, கூகுள் தற்போது இலவசமாக word press, blogger, weebly, wix போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக வலைப்பதிவு தொடங்க உதவுகிறது. இதில் சென்று உங்களுக்கான வலைப்பதிவை தொடங்கி அமைத்துக் கொள்ளலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

தையற்கலை

பொதுவாக பெண்கள் பலருக்கு தையற்கலை என்றாலே மிகவும் பிடித்த ஒன்றாக விளங்கும். இன்றைய நவீன உலகில் தையற்கலையைப் பொறுத்த வரை புது புது டிசைன்கள் நிறைய உள்ளன. அந்த வகையில், தையற்கலையில் இருக்கும் ஆர்வம் எள்ளளவும் குறையவில்லை என்பது உண்மையாகிறது. இதில், அவர்களது திறமையை மேம்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கலாம். மேலும், தையல் தெரியாதவர்கள் கற்றுக் கொண்டு அதன் மூலம் ஆடைகள் தைத்து சம்பாதிக்கத் தொடங்கலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

ஃப்ரீலான்ஸர் பணி

எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தப் பணி முகவும் உரியதாக அமையும். இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்து செய்பவர்கள் வீட்டிலேயே, அவர்களது ஃப்ரீ டைமில் பணி செய்து பணம் சம்பாதிக்கலாம். இதே போல, ஆன்லைனில் டிரான்ஸ்லேட்டர் பணியும் உள்ளது. இது போன்ற, எந்த முதலீடும் செய்யாமல் வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

ஈவண்ட் மேனேஜ்மென்ட்

டாப் பிஸ்னஸில் இடம் பிடித்திருப்பதாய் இருப்பது தான் இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட். பொதுவாக, பிறந்த நாள், திருமணம், வரவேற்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த சில குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் விழா நடைபெறுவதற்கான முழு பொறுப்புகளையும் ஏற்று அட்டகாசமாக செய்து முடிப்பர். அந்த வகையில், இதற்கான ஆர்டர்களை எடுத்து பிசினஸ் செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

கிராஃபிக் டிசைனிங்

வீட்டிலிருந்தே செய்யும் வேலைகளில் ஒன்றாக கிராஃபிக் டிசைனிங் உள்ளது. இந்த வகை பணியிலும் நல்ல லாபம் ஈட்டலாம். இதற்கு அதிகமாக முதலீடு செய்ய தேவையில்லை. இதனைக் கற்பதற்கு ஆன்லைன் வகுப்புகளும் பிரபலமாகி வருகிறது. எனவே, இதனை எளிதாக கற்று அதிகமாக லாபத்தை ஈட்டலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

இன்ஸ்டகிராம்

ஆன்லைனில் பிசினஸ் களைகட்டும் இந்த வேளையில், பெரும்பாலான சமூக வலைதளங்கள் பெரிதளவு லாபத்தை ஈட்டுவதற்கு வழிகாட்டுகிறது. அந்த வகையில் இன்ஸ்டகிராம் பக்கமும் ஒன்று. உங்களது லாபகரமான தொழில் ஒன்றை திறந்து அதனை இன்ஸ்டகிராம், வாட்ஸ் அப் பக்கத்தில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

யோகா பயிற்சி

வீட்டிலிருந்தே நமது உடல் நலனுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படுமாறு செய்வது யோகா பயிற்சி. இவ்வாறு வீட்டிலிருந்தே உங்களுக்குத் தெரிந்த யோகா பயிற்சியை ஆன்லைனில் மூலம் கற்றுக் கொடுக்கலாம். இதிலும், சிறிய அளவு முதலீடு செய்தால் போதும். நல்ல லாபம் ஈட்டலாம்.

பெண்களே! வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டுமா…? அதிக வருமானம் ஈட்ட இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...Representative Image

சமையல் கலை

பெண்களுக்கு சமையல் என்றாலே அத்துபடி. அதிலும், கொரோனா காலங்களில் நிறைய வெரைட்டியான சமையல் செய்து அசத்தி வந்தனர். அந்த வகையில், நீங்கள் செய்த சமையலை வீட்டிலிருந்தபடியே செய்து, சில வீடுகளில் சமைத்த உணவுகளை ஆர்டர் செய்பவர்களிடம் கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். இதே போல, ஆன்லைனில் நீங்கள் செய்த சமையலின் வீடியோவை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் தெரிவிப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்