Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே நேரத்தில் மருத்துவ கலாந்தாய்வு - அமைச்சர் தகவல்!

Baskaran Updated:
ஒரே நேரத்தில் மருத்துவ கலாந்தாய்வு - அமைச்சர் தகவல்!Representative Image.

சென்னை: மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும் போது, தமிழகத்திலும் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் பார்வையிட்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 54,374 மாணவர்களிடம் பேசி உள்ளோம்.
177 பேர், மன அழுத்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.

தேர்ச்சி பெறாத மாணவர்களை தொடர்புகொண்டு பேசி வருகிறோம். 65823 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களின் விவரங்களை கேட்டுள்ளோம். வந்த தும் அவர்களிடம் பேசுவோம். இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. பிரபஞ்சன், மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார்.

முதல் 10 இடங்களில் 4 பேர் இடம்பிடித்திருக்கின்றனர்.  இவர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்
நீட் பயிற்சி சிறப்பாக அளிக்கப்படுவது இதன்மூலம் தெரியவந்துள்ளது. வரும் காலத்தில் இன்னும் சாதிப்பார்கள். கடந்த ஆண்டைப்போல் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடக்கும். ஒரே நேரத்தில் அகில இந்திய கலந்தாய்வு, மாநில கலந்தாய்வு நடக்கும். அடுத்த வார இறுதிக்குள் ஆன்லைன் பதிவு துவங்கும். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதித்தாலும், நீட் விலக்கு என்பது தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கடந்த வாரம் மத்திய உயர்கல்வித துறை நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு இருக்கிறது . இரண்டு மூன்று தினங்களில் விளக்கம் அளிக்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இந்த ஆண்டு கூடுதலாக 450 இடங்கள் கிடைத்திருக்கின்றன என்றும்,சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 50 இடங்கள் கிடைத்திருக்கின்றன என்றும், ஒட்டுமொத்தமாக 500 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன என்றும், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு 50 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன என்றும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்