Tamilnadu News Live : தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், நாளை மதியம் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், “நாளை காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/,
http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/
மேலும், பள்ளி மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அந்த தற்காலிக சான்றிதழை உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கா பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…