Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இந்த 4 வினாக்களுக்கும் இலவச மதிப்பெண்.. தமிழக கல்வித் துறை அறிவிப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: இந்த 4 வினாக்களுக்கும் இலவச மதிப்பெண்.. தமிழக கல்வித் துறை அறிவிப்பு..Representative Image.

10ம் வகுப்புத் தேர்வு 06.04. 2023 அன்று தொடங்கி 20.04.2023 வரை நடைபெற்றது. இதில் ஆங்கில பாடத்திற்கான தேர்வு 10.04.2023 அன்று நடைபெற்றது. இதில் 4, 5, 6 என்ற ஒரு மதிப்பெண் வினாக்கள் குழப்பாக இருந்ததால், அக்கேள்விகளுக்கு மாணவர்களால் முறையாக பதிலளிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. அதேபோல், 2 மதிப்பெண் பிரிவில் 28 வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒரு மதிபெண் பிரிவில் உள்ள 4, 5, 6 வினாக்களுக்கும், 2 மதிப்பெண் பிரிவில் உள்ள 28வது வினாவுக்கும் மாணவர்கள் எப்படி விடை அளித்திருந்தாலும், அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வினாத்தாளை ஆய்வு செய்ததில், பிழை நேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 3 மதிப்பெண்ணும், 28வது கேள்விக்கு இரண்டு மதிப்பெண்ணும் என, மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் எந்த விடையை எழுதியிருந்தாலும், 5 மதிப்பெண்கள் முழுமையாக வழங்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்