Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சாதனை படைத்த அண்ணா யுனிவெர்சிட்டி… 2000க்கும் அதிகமானோர் கேம்பஸில் வேலைவாய்ப்பு…

Gowthami Subramani November 03, 2022 & 15:30 [IST]
சாதனை படைத்த அண்ணா யுனிவெர்சிட்டி… 2000க்கும் அதிகமானோர் கேம்பஸில் வேலைவாய்ப்பு… Representative Image.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 75% அளவிற்கு முதல் முறையாக பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கேம்பஸ் இன்டர்வியூவ் மூலம், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை படிக்கும் போதே பெற்றும் தருவதில், கல்லூரிகளிலேயே அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலை வகிக்கிறது. அதன் படி, கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூவ் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2000-ஐத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக்கழகத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களில் 50% பேர் வளாக வேலைவாய்ப்பு மூலம், பல முன்னணி ஆட்டோமொபைல், மென்பொருள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்று செல்கின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை, அண்ணா பல்கலைக்கழக வளாக வேலைவாய்ப்பு மூலம், பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 75% அளவிற்கு முதன் முறையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வியாண்டு

பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

2019-2020

1,144

2020-2021

1,218

2021-2022

2,116

 

நிர்ணயிக்கப்பட்ட ஊதிய தொகை

அதே போல, அதிக ஊதியம் தரக்கூடிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டு 20 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக ஊதியம் அளித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், தற்போது 2022-23 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் அல்லாத நிறுவனங்கள்

மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் மென்பொருள் அல்லாத நிறுவனங்கள் அதிக அளவு பங்கேற்றத்துடன் வேலைவாய்ப்பு தரக்கூடிய எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு 15 நிறுவனங்கள் 153 மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 33 நிறுவனங்கள் 287 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாக கூறியுள்ளது.

பல முன்னணி நிறுவனங்கள் இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கெடுத்து, குறைந்தது 7 லட்சம் முதல் அதிகபட்சம் 36 லட்சம் வரையிலான ஊதியத்தொகையினைப் பெற்று மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்