Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை - அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.. | Bachelor Degree Admission 2023

Saraswathi Updated:
இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை - அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்.. | Bachelor Degree Admission 2023Representative Image.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

தமிழகத்தில் செயல்பட்டுவரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல வகையான பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெறப்பட்டன. அதன்படி, இளங்கலை படிப்புகளில் சேர்வதற்காக 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டது.  

இதையடுத்து, மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 3 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகள் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர்.  

அதைத் தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி பொதுப்பிரிவு மாணவ-மாணவியருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த 11 நாட்களாக நடைபெற்ற கலந்தாய்வில், சுமார் 40,287 மாணவ-மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது. அதில், மாணவர்கள் 15,034 பேர், மாணவியர் 25,253 ஆவர்.  இவர்களில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 10,918 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.  

முதல் கட்டக் கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதில் நிரப்பப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. வரும் 20ம் தேதியுடன் இன்று இந்தக் கலந்தாய்வு நிறைவடைந்து, ஜூன் 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்