Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Arts and Science College Application Form 2022: மாணவர்களே…! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப அறிவிப்பு….!

Gowthami Subramani June 21, 2022 & 09:02 [IST]
Arts and Science College Application Form 2022: மாணவர்களே…! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப அறிவிப்பு….!Representative Image.

Arts and Science College Application Form 2022: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விவரங்களைப் பற்றி இங்குக் காண்போம்.

திரும்பவும் பழைய நிலை

தமிழகம் மட்டுமல்லாமல் உலகளவில் கொரோனா எனும் பெருந்தொற்றால், அனைத்தும் மாறியது. பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் படி, தற்போது 2022 ஆம் ஆண்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன (Arts and Science College Application Form 2022).

தேர்வு முடிவுகள்

அதன் படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், நேற்று அதாவது ஜூன் மாதம் 21 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிக்கையும் நேற்று தொடங்கியது (Government Arts College Coimbatore Application Form 2022 Last Date).

நாளை முதல்

மேலும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவோர் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 163 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் B.A., B.Com., B.B.A., போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன் படி, இந்த 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் (Tamilnadu Government Arts and Science College Admission 2022).

பதிவு செய்ய வேண்டிய முகவரி

www.tngasa.in

www.tngasa.org

விண்ணப்பிப்பதற்கான காலம்: தமிழ்நாடு அரசு கூறிய படி, ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி மேற்கூறிய இணையதளத்தில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள், கல்லூரி உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணத்தை செலுத்த முடியாத நபர்கள் "The Director, Directorate of Collegiate Education, Chennai - 6" என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் விண்ணப்பதாரர்கள் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

அதன் படி, நாளை முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்