Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNEA Application Form 2022: இன்ஜினியரிங் படிப்பதற்கான விண்ணப்பங்கள் தொடக்கம்…! எப்படி அப்ளை செய்வது, விண்ணப்பக் கட்டணம் முழு விவரங்கள் இதோ….!

Gowthami Subramani June 20, 2022 & 09:05 [IST]
TNEA Application Form 2022: இன்ஜினியரிங் படிப்பதற்கான விண்ணப்பங்கள் தொடக்கம்…! எப்படி அப்ளை செய்வது, விண்ணப்பக் கட்டணம் முழு விவரங்கள் இதோ….!Representative Image.

TNEA Application Form 2022: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா சூழ்நிலையின் காரணமாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டிருந்தது. அதே சமயம் கல்லூரிகளிலும் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன (TNEA Application Form 2022).

தமிழ்நாட்டில் முதல் முறை

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றி தற்போது 10 மற்றும் 12 ஆகிய இரண்டிற்குமே ஜூன் 20 ஆம் தேதி தேர்வு முடிவ்கள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும், இன்று அதாவது ஜூன் 20 ஆம் நாள் காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவும், நண்பகல் 12.00 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் (Engineering Application Form 2022).

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம்

இந்த நிலையில், ஜூன் 20 ஆம் தேதியான இன்று பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி உள்ளது (Online Application for Engineering Colleges in Chennai). அதன் படி, நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் தொடங்க உள்ளது. மேலும், பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22 ஆம் நாள் தொடங்க உள்ளது (Online Application for Engineering Colleges in Coimbatore).

பொறியியல் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும். மேலும், இன்று முதல் ஜூலை மாதம் 19 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் (TNEA Login).

விண்ணப்பிக்கும் முறை

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், இன்று பொறியியல் படிப்புகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிப்பர் எனக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி https://tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் (TNEA Official Website).

மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு தமிழகம் முழுவதும் 110 இடங்களில் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது (TNEA 2022 Application Form).

பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 22 ஆம் நாள் தொடங்கி நவம்பர் 14 அன்று முடிவடைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்